பாதுகாப்புச் செயலாளராக மீண்டும் கமல் குணரத்ன

பாதுகாப்பு அமைச்சின் செயலாளராக, அப்பதவியில் ஏற்கனவே உள்ள ஓய்வு பெற்ற ஜெனரல் கமல் குணரத்ன நியமிக்கப்பட்டுள்ளார்.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, தனக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களுக்கு அமைய  பல அமைச்சுகளுக்கான புதிய செயலாளர்களை நியமித்துள்ளார்.

இதற்கமையவே ஓய்வு பெற்ற ஜெனரல் கமல் குணரத்ன நியமிக்கப்பட்டுள்ளார்.

அதற்கமைய, இன்று (22) முதல் உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் இந்த நியமனம் வழங்கப்படுள்ளதாக பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது.

சிறந்த இராணுவ வரலாற்று பின்னணியைக் கொண்ட ஜெனரல் குணரத்ன இலங்கையின் போர் வரலாறு பற்றிய பல புத்தகங்கள் எழுதியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

(ஸாதிக் ஷிஹான்)


Add new comment

Or log in with...