QR முறைமையின் கீழ் எரிபொருள் விநியோகம்

பரீட்சார்த்த முயற்சி நேற்று முதல் ஆரம்பம்

QR முறைமையின் கீழ் எரிபொருள் விநியோகிக்கும் நடவடிக்கைகள் நேற்றுமுதல் பரீட்சார்த்தமாக ஆரம்பிக்கப்பட்டதாக எரிசக்தி மின்சக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேக்கர தெரிவித்துள்ளார். எவ்வாறெனினும் கொழும்பில் சில பகுதிகளுக்கு

மாத்திரம் நேற்று முதல் இச்செயற்திட்டம் பரீட்சார்த்தமாக முன்னெடுக்கப்பட்டதாக தெரிவித்த அமைச்சர் எதிர்வரும் 25ஆம் திகதியே நாடு முழுவதும் இத்திட்டம் முழுமையாக நடைமுறைப்படுத்தப்படும் என்றும் தெரிவித்தார்.

வாகனங்களின் இலக்கத் தகட்டிலுள்ள இறுதி இலக்கங்களுக்கமைய எரிபொருளை விநியோகிக்கும் நடவடிக்கைகள் நேற்றுமுதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் QR முறைமையின் கீழ் எரிபொருளை விநியோகிக்கும் முறை முழுமையாக நடைமுறைப்படுத்தப்படும்வரை இந்த முறைமையின் கீழ் விநியோகம் நடைபெறுமென்றும் அமைச்சர் தெரிவித்தார்.

அதன்படி, வாகன இலக்கத் தகட்டின் இறுதி இலக்கங்களான 0,1,2 ஆகியவற்றைக் கொண்ட மோட்டார் சைக்கிள்கள் உள்ளிட்ட வாகனங்களுக்கு செவ்வாய் மற்றும் சனிக்கிழமைகளிலும் 3,4,5 ஆகிய இலக்கங்களைக் கொண்ட வாகனங்களுக்கு ஞாயிற்றுக் கிழமை மற்றும் வியாழக்கிழமையிலும் 6,7,8,9 ஆகிய இறுதி இலக்கங்களைக் கொண்ட வாகனங்களுக்கு திங்கள், புதன் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் எரிபொருள் விநியோகிக்கப்படுமென்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

தற்போது கையிருப்பிலுள்ள எரிபொருளை கவனத்திற்கொண்டு எரிபொருள் அளவை மட்டுப்படுத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதுடன் அதன்படி மோட்டார் சைக்கிள் ஒன்றுக்கு 1,500 ரூபாவுக்கும் முச்சக்கரவண்டி ஒன்றுக்கும் 2,000 ரூபாவுக்கு ஏனைய வாகனங்களுக்கு 7,000 ரூபாவுக்கும் பெற்றோல் விநியோகிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரவித்துள்ளார்.

 

லோரன்ஸ் செல்வநாயகம்

 


Add new comment

Or log in with...