பண்டாரநாயக்க சிலையை தகர்க்க முயற்சி; 50 மீ. இற்குள் செல்ல தடையுத்தரவு

காலி முகத்திடலில் SWRD பண்டாரநாயக்க சிலை அமைந்துள்ள இடத்திலிருந்து 50 மீற்றர் பகுதிக்குள் எந்தவொரு தரப்பினரும் உட்பிரவேசிப்பதற்கு தடை விதித்து கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்தினால் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

குறித்த சிலையை சேதப்படுத்தும் திட்டம் இருப்பதாக தமக்கு தகவல் கிடைத்துள்ளதாக பொலிஸார் நீதிமன்றிற்கு அறிக்கை சமர்ப்பித்திருந்தனர்.

அதற்கமைய, இன்றையதினம் (20) கொழும்பு, கோட்டை பொலிஸாரினால் முன்வைக்கப்பட்ட வேண்டுகோளுக்கிணங்க கொழும்பு கோட்டை நீதவான் திலிண கமகே குறித்த சிலையை அண்மித்த 50 மீற்றர் பகுதிக்குள் எந்தவொரு தரப்பினரும் உட்பிரவேசிப்பதற்கு தடை விதிக்கும் உத்தரவை வழங்கியுள்ளார்.


Add new comment

Or log in with...