புதிய ஜனாதிபதி தெரிவு: 223 பேர் வாக்களிப்பு; 4 வாக்குகள் நிராகரிப்பு (Live)

- இருவர் வாக்களிப்பிலிருந்து விலகல்

இன்றையதினம் (20) பாராளுமன்றத்தில் இடம்பெற்று வரும் புதிய ஜனாதிபதியை தெரிவு செய்யும் தேர்தலுக்கான வாக்கெண்ணும் பணிகள் இடம்பெற்று வருகின்றன.

அதற்கமைய, ஆரம்ப கட்டமாக புதிய ஜனாதிபதியைத் தெரிவு செய்யும் வாக்களிப்பின் அடிப்படையில் முதற் கட்டமாக செல்லுபடியான மற்றும் செல்லுபடியாகாத வாக்குககள் எண்ணெப்பட்டன.

அந்த வகையில், மொத்தமாக223 பேர் வாக்களித்துள்ளதோடு, 4 வாக்குகள் நிராகரிக்கப்பட்டுள்ளதாக, பாராளுமன்ற செயலாளர் நாயகம் தம்மிக தஸநாயக்க அறிவித்துள்ளார்.

அதற்யமைய மொத்தமாக 219 வாக்குகள் செல்லுபடியான வாக்குகளாகும்.

இவ்வாக்கெடுப்பில் அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் கட்சி தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், அக்கட்சி உறுப்பினர் செல்வராஜா கஜேந்திரன் எம்.பிக்கள் வாக்களிப்பில் கலந்து கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

சபாநாயகர் உள்ளிட்ட 225 பேரும் இன்றையதினம் பாராளுமன்றத்திற்கு சமூகமளித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.


Add new comment

Or log in with...