National Fuel Pass எரிபொருள் விநியோக திட்டம் ஜூலை 21 கொழும்பில் ஆரம்பம்

- ஜூலை 25 முதல் நாடளாவிய ரீதியில் அமுல்
- இதுவரை 20 இலட்சம் பேர் பதிவு செய்துள்ளனர்

தேசிய எரிபொருள் அட்டை (National Fuel Pass) மூலமான எரிபொருள் விநியோகத் திட்டம், எதிர்வரும் ஜூலை 21 முதல் 24 வரை கொழும்பின் பல இடங்களில் பரீட்சார்த்தமாக இடம்பெறவுள்ளதாக, மின் சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர குறிப்பிட்டார்.

QR மூலமான எரிபொருள் விநியோக சோதனை ஜூலை 21 - 24 வரை பரீட்சிக்கப்படவுள்ளதாக தெரிவித்த அவர், வாகன இலக்கத்தகட்டின் கடைசி இலக்கத்திற்கு அமைய மேற்கொள்ளதாக அவர் தெரிவித்தார்.

அதற்கமைய வாகன இலக்கத்தகட்டின் இறுதி இலக்கம்

  • 0,1,2 - செவ்வாய், சனி
  • 3,4,5 - வியாழன், ஞாயிறு
  • 6,7,8,9 - திங்கள், புதன், வெள்ளி

ஆகிய தினங்களில் எரிபொருள் விநியோகம் இடம்பெறவுள்ளது

இந்நடைமுறைகள் ஜூலை 25 முதல் நாடளாவிய ரீதியில் அமுல்படுத்தப்படவுள்ளதாக, அமைச்சர் கஞ்சன விஜேசேகர குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், இன்று (19) பி.ப. 4.00 மணி வரை 'தேசிய எரிபொருள் அட்டை' (fuelpass.gov.lk) பதிவை மேற்கொண்டவர்கள் தொகை 2 மில்லியன் என கணக்கிடப்பட்டுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

 

 


Add new comment

Or log in with...