ஜூலை 21 ஆரம்பிக்கவிருந்த பாடசாலைகளை ஜூலை 25 ஆரம்பிக்க முடிவு

- போக்குவரத்து, எரிபொருள் சிரமங்களே காரணம்

எதிர்வரும் திங்கட்கிழமை (25) முதல் பாடசாலைகளை ஆரம்பிப்பதற்ககு, கல்வி அமைச்சு முடிவு செய்துள்ளது.

எதிர்வரும் வியாழக்கிழமை (21) முதல் பாடசாலைகளை ஆரம்பிக்க முடிவு செய்யப்பட்டிருந்தது.

ஆயினும் நாட்டில் நிலவும் எரிபொருள் மற்றும் போக்குவரத்து சிரமங்களால் ஏற்பட்ட நெருக்கடி நிலையை கருத்தில் கொண்டு, எதிர்வரும் வாரம் திங்கட்கிழமை (25)முதல் பாடசாலைகளை மீண்டும் ஆரம்பிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

அதற்கமைய, பாடசாலைகளை ஆரம்பித்து நடாத்திச் செல்வதற்கான அறிவுறுத்தல்களை, மாகாணக் கல்விச் செயலாளர்கள், மாகாணக் கல்விப் பணிப்பாளர்கள், வலயக் கல்விப் பணிப்பாளர்கள், பிரிவுக்கு பொறுப்பான/உதவிக் கல்விப் பணிப்பாளர்கள், அனைத்து அதிபர்களுக்கும்  அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

அதற்கிணங்க அனைத்து பாடசாலைகளிலும் கல்வி நடவடிக்கைகளை மேற்கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.


Add new comment

Or log in with...