டளஸை ஆதரிக்க வாசுதேவ தீர்மானம்

அரசியல் நிறக் கண்ணாடி அணிந்து பார்க்காமல் நாட்டு மக்களின் நலனுக்காக டளஸ் அழகப் பெரும எம்.பிக்கு ஆதரவு வழங்க ஜனநாயக இடதுசாரி முன்னணி தீர்மானித்துள்ளதாக அதன் தலைவர் வாசுதேவ நாணயக்கார அறிவித்துள்ளார்.

சம்பிரதாய ரீதியான முரண்பாடுகளுக்கு அப்பால் சர்வகட்சி உடன்பாட்டுடன் அனைவரும் செயற்பட வேண்டும் .மக்களுக்கு விரைவாக நிவாரணம் வழங்கவும் ஜனாநாயகம்.நிர்வாகக் கட்டமைப்பு, மக்களின் பாதுகாப்பு என்பவற்றை உறுதி செய்வதற்கு டளஸ் தான் உகந்தவர்.

தற்போதைய நெருக்கடி நிலைக்கு தீர்வு காணவும் போராட்டக்காரர்களுடன் கலந்துரையாடி நிரந்த தேசிய கொள்கை அமைக்கவும் அவரே சரியான நபராகும்.அதனால் அவர் மீது நம்பிக்கை வைத்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். (பா)


Add new comment

Or log in with...