எந்த வேட்பாளருக்கு ஆதரவு என்பதை இன்று அறிவிப்போம்

CWC தலைவர் செந்தில் தொண்டமான்

 

எந்த ஜனாதிபதி வேட்பாளருக்கு ஆதரவளிப்பது என்பது தொடர்பில் இதுவரை இறுதி தீர்மானம் எடுக்கப்படவில்லை என இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் செந்தில் தொண்டமான் தெரிவித்தார்.

குறித்த விடயம் தொடர்பில் கட்சி உறுப்பினர்களுடன் கலந்துரையாடிஇன்று 19ஆம் திகதி தீர்மானிக்கப்படும் என அவர் குறிப்பிட்டார்.

இதேவேளை, ஜனாதிபதி பதவிக்கான போட்டி விடயத்தில் பொது எதிர்க்கட்சி என்ற அடிப்படையில், தங்களுக்குள் பேச்சுவார்த்தை நடத்தி எடுக்கின்ற ஒருமித்த முடிவுடன் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் இருக்கும் என அதன் பொதுச் செயலாளர் நிஸாம் காரியப்பர் தெரிவித்துள்ளார். ஜனாதிபதி வேட்பாளருக்கான கட்சியின் ஆதரவு தொடர்பில் வினவிய போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டார்.


Add new comment

Or log in with...