- ஜூலை 21 முதல் பெற்றோல் 92, ஒட்டோ டீசல் தொடர்ச்சியாக வழங்கப்படும்
இன்று (17) இரவு 10.00 மணி முதல் எரிபொருட்களின் விலைகள் குறைக்கப்படவுள்ளதாக, இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் மற்றும் LIOC நிறுவனங்கள் அறிவித்துள்ளன.
அந்த வகையில்
பெற்றோல்
ஒக்டேன் 92: ரூ. 470 இருந்து ரூ. 450 (ரூ. 20 ஆல் குறைப்பு)
ஒக்டேன் 95: ரூ. 550 இருந்து ரூ. 540 (ரூ. 10 ஆல் குறைப்பு)
டீசல்
ஒட்டோ டீசல்: ரூ. 460 இருந்து ரூ. 440 (ரூ. 20 ஆல் குறைப்பு)
சுப்பர் டீசல்: ரூ. 520 இருந்து ரூ. 510 (ரூ. 10 ஆல் குறைப்பு)
இதேவேளை, எதிர்வரும் ஜூலை 21ஆம் திகதி முதல் ஒக்டேன் 92 பெற்றோல் மற்றும் ஒட்டோ டீசல் ஆகிய எரிபொருட்களை பொதுமக்களுக்கு தொடர்ச்சியாக விநியோகிக்க உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக, இ.பெ.கூட்டுத்தாபனம் அறிவித்துள்ளது.
அந்த வகையில், எரிபொருள் நிலையங்களுக்கு அருகில் ஒன்றுகூட வேண்டாமெனவும், வீதியின் இரு மருங்கிலும் வரிசைகளில் நிற்க வேண்டாமெனவும் பொதுமக்களிடம் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.
அத்துடன், தற்போது மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சினால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள, தேசிய எரிபொருள் அட்டை (National Fuel Pass) பெறும் நடவடிக்கைக்காக fuelpass.gov.lk எனும் தளத்திற்கு சென்று, அதில் பதிவுகளை மேற்கொள்ளுமாறு இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் கோரிக்கை விடுத்துள்ளது.
இது தொடர்பிலான மேலதிக விபரங்களுக்கு இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தை தொடர்பு கொள்ளலாம்:
0115 234 234
0115 455 126
0115 455 130
<<< இறுதியாக CEYPETCO/LIOC மேற்கொண்ட எரிபொருள் விலை அதிகரிப்பு விபரம் >>>
பெற்றோல்
ஒக்டேன் 92: ரூ. 420 இருந்து ரூ. 470 (ரூ. 50 ஆல் அதிகரிப்பு)
ஒக்டேன் 95: ரூ. 450 இருந்து ரூ. 550 (ரூ. 100 ஆல் அதிகரிப்பு)
டீசல்
ஒட்டோ டீசல்: ரூ. 400 இருந்து ரூ. 460 (ரூ. 60 ஆல் அதிகரிப்பு)
சுப்பர் டீசல்: ரூ. 445 இருந்து ரூ. 520 (ரூ. 75 ஆல் அதிகரிப்பு)
Add new comment