ஜனாதிபதியின் அறிவிப்புகள் சபாநாயகரால் மாத்திரம் வெளியிடப்படும்

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் விடுக்கப்படும் செய்திகள் யாவும் சபாநாயகரால் மாத்திரம் வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி அலுவலகத்தினால் இவ்வறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதியின் அறிவிப்புகள், சபாநாயகருக்கு அறிவிக்கப்பட்டு அதன் பின்னர் அவரால் வெளியிடப்படுமென அறிவிக்கப்பட்டுள்ளது.

எனவே சபாநாயகரால் வெளியிடப்படும் அறிவிப்புகுள் மாத்திரம் ஜனாதிபதியினால் வெளியிடப்படும் உத்தியோகபூர்வ அறிவிப்புகள் என கருதுமாறு கேட்டுக் கொள்வதாக, ஜனாதிபதி அலுவலக அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, ஏற்கனவே அறிவித்தபடி தாம் பதவி விலகவுள்ளதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிடம் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளதாக, பிரதமரின் ஊடகப் பிரிவு இன்று (11) முற்பகல் அறிவிப்பொன்றை விடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.


Add new comment

Or log in with...