ஜனாதிபதி மாளிகை, ஜனாதிபதி செயலகத்திற்குள் புகுந்த ஆர்ப்பாட்டக்காரர்கள்

- ஜனாதிபதி மாளிகையிலிருந்து தப்பிச் சென்ற கோட்டாபய
- கட்சித் தலைவர்களுக்கு ரணில் அவசர அழைப்பு
- அவசர கட்சித் தலைவர்கள் கூட்டம் பி.ப. 4 மணிக்கு
- ஜனாதிபதியை விலகுமாறு ஆளும் கட்சி எம்.பிக்கள் கடிதம்

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷவை பதவி விலகுமாறு தெரிவித்து தற்போது (09) கொழும்பில் இடம்பெற்று வரும் பாரிய ஆர்ப்பாட்ட பேரணி, ஜனாதிபதி செயலகம் மற்றும் ஜனாதிபதி மாளிகைக்குள் நுழைந்துள்ளது.

 

 

 

 

பல்வேறு தடைகள், கண்ணீர்ப்புகை பிரயோகங்களையும் மீறி மக்கள் இவ்வாறு ஜனாதிபதி செயலகம் மற்றும் ஜனாதிபதி மாளிகைக்குள் நுழைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ ஜனாதிபதி மாளிகையிலிருந்து தப்பிச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை, நாட்டின் தற்போதைய நிலை தொடர்பில் கலந்துரையாடி விரைவான தீர்மானத்தை எடுக்க பிரதமர் ரணில் விக்ரமசிங்க அவசர கட்சித் தலைவர்கள் கூட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளார்

இதேவேளை, பாராளுமன்றத்தை அவசரசமாக கூட்டுமாறு பிரதமர் ரணில் விக்ரமச்ஙிக சபாநாயகரிடம் கோரிக்கை விடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

அந்த வகையில், எதிர்வரும் திங்கள் அல்லது செவ்வாய்க்கிழமை அளவில் பாராளுமன்றத்தை கூட்ட நடவடிக்கை எடுக்கப்படுமென சபாநாயகர் அலுவலக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஆயினும் இன்று (09) பி.ப. 4.00 மணிக்கு கட்சித் தலைவர்கள் கூட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளதாக, பாராளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் தனது ட்விட்டர் கணக்கில் தெரிவித்துள்ளார்.

 

 

இந்நிலையில், ஆளும் கட்சி எம்.பிக்காளன டலஸ் அழகப்பெரும, சன்ன ஜயசுமண, நாலக கொடஹேவா உள்ளிட்ட 16 பேர் ஜனாதிபதிக்கு கடிதமொன்றை எழுதியுள்ளனர்.

 

 

ஐ.ம.ச. பாராளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்ன ஆர்ப்பாட்டக்காரர்கள் முன்னிலையில் சமூகமளித்த போது....

 

 

 

 

ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது கண்ணீர்ப்புகை வீசிய போது, அருகிலுள்ள கலதாரி ஹோட்டல் நிர்வாகம் அவர்களுக்கு அடைக்கலம் வழங்கியிருந்தது...

 

 

நாட்டிலிருந்து தப்பிச் செல்லும் பெரும்புள்ளிகள்...?

 

 

 

 


Add new comment

Or log in with...