நேற்று (08) இரவு 9.00 மணி முதல் மறுஅறிவித்தல் வரை, மேல் மாகாணத்தில் நீர்கொழும்பு, களனி, நுகேகொடை, கல்கிஸ்ஸை, கொழும்பு வடக்கு, தெற்கு, மத்தி ஆகிய பொலிஸ் பிரிவுகளுக்கு பொலிஸ் ஊரடங்கு அமுல்படுத்தப்படுவதாக, பொலிஸ் தலைமையகம் அறிவித்திருந்த ஊரடங்குச் சட்டம் இன்று (09) மு.ப. 8.00 மணிக்கு நீக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
பல்வேறு தரப்பிலிருந்தும் எதிர்ப்பு, கண்டனம்
அரசாங்கத்திற்கு எதிராகவும், ஜனாதிபதியை பதவி விலகுமாறு தெரிவித்தும் இன்றையதினம் (09) கொழும்பில் பாரிய ஆர்ப்பாட்டம் ஒழுங்கு செய்யப்பட்டிருந்த நிலையில், இவ்வாறு அமுல்படுத்தப்பட்ட ஊரடங்குச் சட்டத்தை தொடர்ந்து, சட்டத்தரணிகள் சங்கம், இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் மற்றும் அரசியல்வாதிகளினால் எதிர்ப்புத் தெரிவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
பொலிஸ் ஊரடங்கு அமுல்படுத்துவதற்கு எவ்வித சட்ட ரீதியான உரிமையும் கிடையாது என அவ்வமைப்புகள் சுட்டிக்காட்டியிருந்த நிலையில் இன்று மு.ப. 8.00 மணிக்கு ஊரடங்குச் சட்டம் நீக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Add new comment