மேலும் 3 நிறுவனங்கள் அமைச்சர் தம்மிக பெரேராவின் கீழ்

- ஜனாதிபதியினால் அதி விசேட வர்த்தமானி

முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சர் தம்மிக பெரேராக பதவி வகிக்கும் அமைச்சின் கீழ்  மேலும் மூன்று நிறுவனங்களை இணைத்து அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் குறித்த வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.

அதற்கமைய, ஜனாதிபதியின் கீழுள்ள பாதுகாப்பு அமைச்சின் கீழுள்ள ரக்னா ஆரக்ஷண லங்கா (Rakna Arakshaka Lanka Ltd) நிறுவனம் உள்ளிட்ட மூன்று நிறுவனங்கள் முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளன.

அது தவிர, நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சின் கீழிருந்த செலந்திவ இன்வெஸ்ட்மென்ட் லிமிடெட் (Selendiva Investments Limited), ஹொட்டேல் டெவலபர்ஸ் (லங்கா) தனியார் நிறுவனம் (Hotel Developers (Lanka) Pvt Limited) ஆகிய இரண்டும் முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளன.

PDF File: 

Add new comment

Or log in with...