கொரோனா பொருந்தொற்றுக்குப் பின்னராக மிகப்பெரிய ஹஜ் கடமை நேற்று புதன்கிழமை ஆரம்பமானது. சவூதி அரேபியாவின் மக்கா நகரில் உள்ள புனித கஃபாவை பெரும்பாலும் முகக்கவசம் அணியாத ஆயிரக்கணக்கான யாத்திரிகர்கள் வலம் வர ஆரம்பித்துள்ளனர்.
வெளிநாட்டைச் சேர்ந்த 850,000 யார்த்திரிகர்கள் உட்பட முழுமையாக தடுப்பூசி ஒரு மில்லியன் முஸ்லிம்கள் இந்த ஆண்டு ஹஜ் கடமைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
உத்தியோகபூர்வமான ஹஜ் கடமை ஆரம்பமான நேற்றைய தினத்தில் பலரும் தமது ஆன்மீக வழிபாடுகளில் ஈடுபட ஆரம்பித்துள்ளனர். இம்முறை ஹஜ் கடமையில் கடந்த இரண்டு ஆண்டுகளை விட அதிகமான யாத்திரிகர்கள் பங்கேற்றபோதும் சாதாரண காலத்தை விடவும் குறைவானவர்களே கலந்துகொண்டுள்ளனர்.
வசதி படைத்த முஸ்லிம்கள் செய்ய வேண்டி ஹஜ் கடமையில் 2019 ஆம் ஆண்டு சுமார் 2.5 மில்லியன் முஸ்லிம்கள் கலந்துகொண்டிருந்தனர். எனினும் கொரோனா தொற்று காரணமாக 2020 இல் ஒருசில ஆயிரம் பேரே ஹஜ்ஜில் கலந்துகொண்டதோடு கடந்த ஆண்டு முழுமையாக தடுப்பூசி பெற்ற 60,000 சவூதி பிரஜைகள் மற்றும் குடியிருப்பாளர்களே பங்கேற்றனர்.
Add new comment