சீரற்ற காலநிலை; வாகன சாரதிகள் அவதானம்

நுவரெலியா, நானுஓயாவிலும் பலத்த காற்றுடன் கூடிய மழை நேற்று இரவு முதல் பெய்து வருகிறது. தொடர்ச்சியாக பெய்து வரும் மழை காரணமாகவும் கடும் குளிரான காலநிலை நிலவி வருகிறது.

நுவரெலியாவில் பிரதான வீதிகளில் அதிக பனிமூட்டம் காணப்படுகின்றது

குறிப்பாக நுவரெலியா - ஹற்றன் , நுவரெலியா - கண்டி மற்றும் நுவரெலியா - பதுளை பிரதான வீதியில் பனி மூட்டம் காணப்படுவதன் காரணமாக இவ்வீதிகளை பயன்படுத்தும் வாகன சாரதிகள் வாகனத்தை அவதானமாக செலுத்துமாறும் , காலை நேரத்தில் பனிமூட்டம் அதிகரித்து காணப்படுவதன் காரணமாக வாகனத்தில் (ஹெட்லைட்) முன் விளக்குகளை ஒளிரவிட்டு  வாகனத்தை செலுத்துமாறும் போக்குவரத்து  பொலிஸார் கேட்டுக்கொள்கின்றனர்.

அத்தோடு பலத்த காற்றும் வீசப்படுகின்றது. சில இடங்களில் மரங்கள் முறிந்து விழுந்துள்ளமையும் சுட்டிக்காட்டப்பட வேண்டிய விடயமாகும்.


Add new comment

Or log in with...