கொழும்பின் சில பகுதிகளில் திடீர் நீர் வெட்டு

- நாளை காலை 6.00 மணிக்கு முன் சீர் செய்ய நடவடிக்கை

கொழும்பின் சில பகுதிகளில் திடீரென நீர் வெட்டு அமுல்ப்படுத்தப்பட்டுள்ளது.

நீர் விநியோக குழாயொன்றில் ஏற்பட்டுள்ள திடீர் உடைப்பு காரணமாக கொழும்பு 12 (வாழைத்தோட்டம்/புதுக்கடை), கொழும்பு 13 (கொட்டாஞ்சேனை/கொச்சிக்கடை), கொழும்பு 14 (கிராண்ட்பாஸ்), கொழும்பு 15 (மட்டக்குளி, மோதறை/முகத்துவாரம்) ஆகிய பிரதேசங்களில் இவ்வாறு நீர் விநியோகம் தடைப்பட்டுள்ளதாக, தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை அறிவித்துள்ளது.

நாளை காலை 6.00 மணிக்குள் நீர் விநியோகத்தை வழமைக்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக, சபை தெரிவித்துள்ளது.

இதேவேளை, குறித்த காலப்பகுதியில் கொழும்பு 01 (கோட்டை) பிரதேசத்திற்கு குறைந்த அழுத்தத்தின் கீழ் நீர் விநியோகம் மேற்கொள்ளப்படுமென சபை சுட்டிக்காட்டியுள்ளது.


Add new comment

Or log in with...