கிளிநொச்சியில் 200 லீற்றர் பெற்றோல், 6,400 லீற்றர் டீசல், 25 லீற்றர் மண்ணெண்ணெய் மீட்பு

கிளிநொச்சி, கரடிபொக்க பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் 35 பீப்பாக்களில் (பெரல்) பதுக்கி வைக்கப்பட்டிருந்த பெற்றோல், டீசல், மண்ணெய் ஆகிய எரிபொருட்களை பொலிஸார் மீட்டுள்ளனர்.

இன்று (03) காலை கிளிநொச்சி பொலிஸ் நிலைய அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலுக்கமைய, கிளிநொச்சி, கரடிபொக்க பிரதேசத்திலுள்ள வீடொன்றின் கராஜில் சட்டவிரோதமாக, அனுமதிப்பத்திரம் இன்றி மறைத்துவைக்கப்பட்டிருந்த எரிபொருட்களை பொலிஸார் மீட்டுள்ளனர்.

இதன்போது, 35 பீப்பாக்களில் மறைத்து வைக்கப்பட்டிருந்த, 200 லீற்றர் பெற்றோல், 6,400 லீற்றர் டீசல், 25 லீற்றர் மண்ணெண்ணெய் ஆகியன பொலிஸாரினால் கைப்பற்றப்பட்டுள்ளதாக, பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

சம்பவம் தொடர்பில் 25 வயதான கிளிநொச்சி, கரடிபொக்க பிரதேசத்தைச் சேர்ந்த சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேகநபர் நாளையதினம் (04) கிளிநொச்சி நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளதோடு, இது தொடர்பான மேலதிக விசாரணைகளை கிளிநொச்சி பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.


Add new comment

Or log in with...