1st Test; SLvAUS: அவுஸ்திரேலிய அணி 10 விக்கெட்டுகளால் அபார வெற்றி

- வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்ட 5 ஓட்டங்கள்; ஒரு 4, ஒரு 6 ஓட்டமாக விளாசல்

சுற்றுலா அவுஸ்திரேலிய அணிக்கும் இலங்கை அணிக்கும் இடையில் காலியில் இடம்பெற்ற முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் அவுஸ்திரேலிய அணி அபார வெற்றியை வெற்றியீட்டியுள்ளது.

இன்றைய 3ஆவது நாள் ஆட்டத்தின்போது 109 ஓட்டங்கள் பின்னிலையில் இருந்து தனது இரண்டாம் இன்னிங்ஸை ஆரம்பித்த இலங்கை அணி சகல விக்கெட்டுகளையும் இழந்து 113 ஓட்டங்களை மாத்திரம் பெற்றது.

அதற்கமைய, மேலதிகமாக 4 ஓட்டங்களை மாத்திரம் பெற்ற இலங்கை அணியினால் அவுஸ்திரேலிய அணிக்கு 5 ஓட்டங்கள் எனும் வெற்றி இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.

அந்த வகையில் 5 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலிய அணி சார்பில் முதல் ஓவரின் 3ஆவது மற்றும் 4ஆவது பந்துகளில் பந்தை விளாசிய டேவிட் வோனர் முறையே 4 மற்றும் 6 ஓட்டங்கள் என எல்லைக் கோட்டுக்கு அப்பால் அடித்து ஆடி வெற்றி இலக்கை கடக்கச் செய்தார்.

கடந்த ஜூன் 29 ஆம் திகதி ஆரம்பமான இப்போட்டியில் நாணயச் சுழற்சியை வெற்றியீட்டிய இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.

அந்த வகையில் தனது முதல் இன்னிங்ஸில் இலங்கை அணி சகல விக்கெட்டுக்களையும் இழந்து 212 ஓட்டங்களை மாத்திரம் பெற்றது.

இலங்கை அணி சார்பில் உச்சபட்சமாக நிரோஷன் திக்வெல்ல 58 (59) ஓட்டங்களையும், அஞ்சலோ மெத்திவ்ஸ் 39 (71) ஓட்டங்களையும் பெற்றனர்.

அவுஸ்திரேலிய அணி சார்பில் நதன் லயன் 5 விக்கெட்டுகளையும், மிச்சல் ஸ்வெப்சன் 3 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.

அதனைத் தொடர்ந்து, தனது முதல் இன்னிங்ஸை விளையாடிய அவுஸ்திரேலிய அணி இன்றையதினம் சகல விக்கெட்டுகளையும் இழந்து 321 ஓட்டங்களை பெற்றது.

அவ்வணி சார்பில் உச்சபட்சமாக கெமரன் கிரீன் 77 (109) ஓட்டங்களையும், உஸ்மான் கவாஜா 71 (130) ஓட்டங்களையும் பெற்றனர்.

பந்துவீச்சில் இலங்கை அணி சார்ப்பில் ரமேஷ் மெண்டிஸ் 4 விக்கெட்டுகளையும், ஜெப்ரி வென்டர்சே மற்றும் அசித பெர்ணான்டோ ஆகியோர் தலா 2 விக்கெட்களையும் வீழ்த்தியிருந்தனர்.

தொடர்ந்து தமது இரண்டாவது இன்னிங்ஸை விளையாடிய இலங்கை அணி சகல விக்கெட்களையும் இழந்து 113 ஓட்டங்களை மாத்திரமே பெற்றுக் கொண்டது.

பந்துவீச்சில் நதன் லயன் மற்றும் ட்ராவிஸ் ஹெட் ஆகியோர் தலா 4 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.

அதற்கமைய அவுஸ்திரேலிய அணிக்கு 5 ஓட்டங்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. குறித்த ஓட்டங்களை முதல் ஓவரிலேயே எவ்வித விக்கெட் இழப்புமின்றி அவுஸ்திரேலிய அணி பெற்று போட்டியை வெற்றியீட்டி, 2 போட்டிகளைக் கொண்ட டெஸ்ட் தொடரில் 1-0 என முன்னிலையில் உள்ளது.

போட்டியின் நாயகனாக கெமரொன் கிரீன் தெரிவானார்.

இத்தொடரின் 2அவது போட்டி எதிர்வரும் ஜூலை 08ஆம் திகதி காலியில் இடம்பெறவுள்ளது.

SRI LANKA 1ST INNINGS 
BATTING   R B M 4s 6s SR
Pathum Nissanka  c †Carey b Cummins 23 44 55 3 0 52.27
Dimuth Karunaratne (c) c Warner b Lyon 28 84 130 3 0 33.33
Kusal Mendis  c †Carey b Starc 3 15 20 0 0 20.00
Angelo Mathews  c Warner b Lyon 39 71 120 3 0 54.92
Dhananjaya de Silva  c †Carey b Swepson 14 22 29 2 0 63.63
Dinesh Chandimal  c Warner b Swepson 0 1 1 0 0 0.00
Niroshan Dickwella † c †Carey b Lyon 58 59 97 6 0 98.30
Ramesh Mendis  lbw b Lyon 22 36 53 3 0 61.11
Jeffrey Vandersay  c Starc b Swepson 6 15 26 1 0 40.00
Lasith Embuldeniya  c Khawaja b Lyon 6 6 20 0 1 100.00
Asitha Fernando  not out 2 1 5 0 0 200.00
Extras (b 5, lb 6) 11  
TOTAL 59 Ov (RR: 3.59, 278 Mts) 212
 
Did not bat: Oshada Fernando
Fall of wickets: 1-38 (Pathum Nissanka, 12.1 ov), 2-42 (Kusal Mendis, 16.1 ov), 3-74 (Dimuth Karunaratne, 29.2 ov), 4-97 (Dhananjaya de Silva, 36.1 ov), 5-97 (Dinesh Chandimal, 36.2 ov), 6-139 (Angelo Mathews, 43.1 ov), 7-193 (Ramesh Mendis, 53.5 ov), 8-198 (Niroshan Dickwella, 55.3 ov), 9-206 (Lasith Embuldeniya, 57.5 ov), 10-212 (Jeffrey Vandersay, 58.6 ov)
BOWLING O M R W ECON WD NB
Mitchell Starc 9 0 31 1 3.44 0 0
Pat Cummins 12 4 25 1 2.08 0 0
Nathan Lyon 25 2 90 5 3.60 0 0
Mitchell Swepson 13 0 55 3 4.23 0 0
 
AUSTRALIA 1ST INNINGS 
BATTING   R B M 4s 6s SR
Usman Khawaja  c Nissanka b Vandersay 71 130 152 7 0 54.61
David Warner  lbw b RTM Mendis 25 24 37 5 0 104.16
Marnus Labuschagne  c AM Fernando b RTM Mendis 13 19 25 2 0 68.42
Steven Smith  run out (†Dickwella/BKG Mendis) 6 11 15 0 0 54.54
Travis Head  c & b de Silva 6 16 24 0 0 37.50
Cameron Green  lbw b RTM Mendis 77 109 184 6 0 70.64
Alex Carey † c Chandimal b RTM Mendis 45 47 83 6 0 95.74
Mitchell Starc  c & b Vandersay 10 30 56 1 0 33.33
Pat Cummins (c) b AM Fernando 26 18 29 1 3 144.44
Nathan Lyon  not out 15 20 29 2 0 75.00
Mitchell Swepson  b AM Fernando 1 2 3 0 0 50.00
Extras (b 20, lb 3, nb 1, w 2) 26  
TOTAL 70.5 Ov (RR: 4.53, 323 Mts) 321
 
Fall of wickets: 1-47 (David Warner, 9.1 ov), 2-75 (Marnus Labuschagne, 15.2 ov), 3-83 (Steven Smith, 19.1 ov), 4-100 (Travis Head, 26.1 ov), 5-157 (Usman Khawaja, 38.6 ov), 6-241 (Alex Carey, 54.3 ov), 7-278 (Cameron Green, 63.5 ov), 8-278 (Mitchell Starc, 64.2 ov), 9-319 (Pat Cummins, 70.2 ov), 10-321 (Mitchell Swepson, 70.5 ov)
BOWLING O M R W ECON WD NB
Asitha Fernando 8.5 1 37 2 4.18 2 0
Dhananjaya de Silva 5 0 8 1 1.60 0 0
Lasith Embuldeniya 15 0 73 0 4.86 0 1
Ramesh Mendis 32 0 112 4 3.50 0 0
Jeffrey Vandersay 10 0 68 2 6.80 0 0
 
SRI LANKA 2ND INNINGS 
BATTING   R B M 4s 6s SR
Pathum Nissanka  lbw b Swepson 14 19 32 1 0 73.68
Dimuth Karunaratne (c) c †Carey b Lyon 23 20 25 5 0 115.00
Kusal Mendis  c Swepson b Lyon 8 15 26 1 0 53.33
Oshada Fernando  c Smith b Swepson 12 18 27 1 1 66.66
Dhananjaya de Silva  lbw b Head 11 20 37 0 0 55.00
Dinesh Chandimal  b Head 13 21 23 1 0 61.90
Niroshan Dickwella † c Labuschagne b Lyon 3 7 18 0 0 42.85
Ramesh Mendis  c Khawaja b Lyon 0 2 4 0 0 0.00
Jeffrey Vandersay  b Head 8 8 11 1 0 100.00
Lasith Embuldeniya  lbw b Head 0 6 8 0 0 0.00
Asitha Fernando  not out 5 2 4 1 0 250.00
Extras (b 10, lb 5, nb 1) 16  
TOTAL 22.5 Ov (RR: 4.94, 112 Mts) 113
 
Fall of wickets: 1-37 (Dimuth Karunaratne, 5.3 ov), 2-39 (Pathum Nissanka, 6.5 ov), 3-59 (Kusal Mendis, 11.1 ov), 4-63 (Oshada Fernando, 12.2 ov), 5-95 (Dinesh Chandimal, 18.2 ov), 6-96 (Dhananjaya de Silva, 18.5 ov), 7-97 (Ramesh Mendis, 19.4 ov), 8-108 (Niroshan Dickwella, 21.2 ov), 9-108 (Jeffrey Vandersay, 22.1 ov), 10-113 (Lasith Embuldeniya, 22.5 ov)
BOWLING O M R W ECON WD NB
Mitchell Starc 2 0 23 0 11.50 0 0
Nathan Lyon 11 1 31 4 2.81 0 0
Mitchell Swepson 7 0 34 2 4.85 0 1
Travis Head 2.5 0 10 4 3.52 0 0
 
AUSTRALIA 2ND INNINGS (Target: 5 runs)
BATTING   R B M 4s 6s SR
David Warner  not out 10 4 3 1 1 250.00
Usman Khawaja  not out 0 0 3 0 0 -
Extras   0  
TOTAL 0.4 Ov (RR: 15.00, 3 Mts) 10
 
BOWLING O M R W ECON WD NB
Ramesh Mendis 0.4 0 10 0 15.00 0 0

 


Add new comment

Or log in with...