சிங்கர் விற்பனை நிலையங்களில் ZTE Blade A5 2020 ஸ்மார்ட்போன்

ZTE நிறுவனத்தினால் அண்மையில் அறிமுகப்படுத்தப்பட்ட ஸ்மார்ட் கையடக்கத் தொலைபேசியான ZTE Blade A5 2020 இப்போது இலங்கையில் உள்ள சிங்கர் காட்சியறைகளில் கிடைக்கப்பெறுகின்றது. 2ஜிபி RAM கொண்ட 6,088 அங்குல display யினை கொண்ட இந்த குறித்த வகை கையடக்கத் தொலைபேசி ஆனது வாடிக்கையாளர்களுக்கு ஒரு சிறந்த மற்றும் தனித்துவமான அனுபவத்தை அளிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டு உள்ளமை குறிப்பிடத்தக்கது.

மேற்குறித்த கையடக்கத் தொலைபேசி வகை பார்ப்பதற்கும் வாடிக்கையாளரை ஈர்க்கும் வகையில் காணப்படும். அந்த வகையில், இக்கையடக்கத் தொலைபேசி வகையானது கடும் பச்சை, நீலம் மற்றும் கறுப்பு ஆகிய மிகவும் கவர்ச்சிகரமான நிறங்களில் கிடைக்கிறது. அது மட்டுமல்லாது, ZTE Blade A5 2020 வகை கையடக்கத் தொலைபேசியானது இலங்கையின் சந்தையில் காணப்படும் ஏனைய ஸ்மார்ட் கையடக்க தொலைபேசிகளை விட வாடிக்கையாளர்களை ஈர்க்கக்கூடிய பல்வேறு அம்சங்களையும் கொண்டுள்ளது.

ZTE Blade A5 2020 வகை கையடக்கத் தொலைபேசியானது 2GB RAM க்கு மேலதிகமாக 32GB ROM மற்றும் 3200mAh பேட்டரியுடன் கிடைக்கப்பெறுகின்றது. 6.088 ”HD Water Drop Notch Display திரையானது அதன் கூர்மையான மற்றும் தெளிவான காட்சிகள் மூலம் பார்வையாளருக்கு ஒரு மகிழ்ச்சியான அனுபவத்தை வழங்க வல்லது.


Add new comment

Or log in with...