தடுப்புமருந்தால் 20 மில்லியன் கொவிட் மரணங்கள் தவிர்ப்பு

கொவிட்-19 தடுப்புமருந்துகள் அறிமுகமான முதலாண்டிலேயே 20 மில்லியன் உயிரிழப்புகளைத் தடுத்திருப்பதாய்ப் பெரிய அளவில் நடத்தப்பட்ட ஆய்வின்மூலம் தெரியவந்துள்ளது. 

“தி லான்செட் இன்பெக்சன் டிசீஸ்” மருத்துவச் சஞ்சிகையில்  ஆய்வறிக்கை வெளியிடப்பட்டது. 185 நாடுகளிலிருந்தும் எல்லைகளிலிருந்தும் சேகரிக்கப்பட்ட தரவுகளின் அடிப்படையில் இந்த ஆய்வு நடத்தப்பட்டது. 

இது 2020ஆம் ஆண்டு டிசம்பர் 8ஆம் திகதிக்கும் 2021ஆம் ஆண்டு டிசம்பர் 8ஆம் திகதிக்கும் இடைப்பட்ட காலத்தில் நடத்தப்பட்டது. 

நேரடியாகவோ, மறைமுகமாகவோ தடுக்கப்பட்ட நோய்த்தொற்று உயிரிழப்புகளின் எண்ணிக்கையைக் கணிக்கும் முதல் முயற்சி இதுவாகும்.

தடுப்புமருந்துகள் இல்லாவிட்டால் 31.4 மில்லியன் உயிரிழப்புகள் ஏற்பட்டிருக்கக்கூடும் என்று கணிக்கப்பட்டது. இதில் 63 வீதம் அதாவது 19.8 மில்லியன் உயிரிழப்புகள் தடுக்கப்பட்டன என்று ஆய்வின் மூலம் தெரியவந்தது. 

 


Add new comment

Or log in with...