ஐரோப்பிய ஒன்றியத்தில் வேட்பாளரானது உக்ரைன்

ஐரோப்பிய ஒன்றியத்தில் உக்ரைனும் மோல்டோவாவும் வேட்பாளர் என்ற நிலையில் சேர்ந்துகொள்ள, ஒன்றியத் தலைவர்கள் ஒப்புதல் வழங்கியுள்ளனர். 

அந்த முடிவைத் தனித்துவமான, வரலாற்றுச் சிறப்புமிக்க தருணம் என்று உக்ரைன் ஜனாதிபதி வொலோடிமிர் செலென்ஸ்கி பாராட்டினார்.

ரஷ்யாவின் படையெடுப்பிலிருந்து தன்னைத் தற்காத்துக்கொள்ளவும் ஐரோப்பாவில் இடம்பிடிக்கவும் உக்ரைன் முயன்றுவருகிறது.

உக்ரைனின் எதிர்காலம், ஐரோப்பிய ஒன்றியத்துடன் இருப்பதாக அவர் குறிப்பிட்டார்.

ஒன்றியத்தின் பாராளுமன்றக் கட்டடத்தின் முன்புறத்தில் 30 மீற்றர் உயரமுள்ள கம்பத்தில் உக்ரைனியக் கொடி நிறுவப்பட்டுள்ளது. 

உக்ரைன் ஐரோப்பிய ஒன்றியத்தில் அதிகாரபூர்வமாக இணைய இன்னும் பல ஆண்டுகள் ஆகலாம். ஆனால் ரஷ்யாவின் நடவடிக்கையைக் கண்டிப்பதற்காக, ஒன்றியத்தில் உக்ரேனைச் சேர்த்துக்கொள்வது துரிதப்படுத்தப்படலாம் என்று கூறப்படுகிறது. இந்த வேட்பாளர் அந்தஸ்து என்பது ஐரோப்பிய ஒன்றியத்தில் உக்ரைனை இணைத்துவிடாது மேலும் பாதுகாப்பு உத்தரவாதங்களையும் இதன் மூலமாக உக்ரைனால் பெற முடியாது.

அதே நேரம் இந்த அந்தஸ்து கொண்ட நாட்டுக்கு தொழில்நுட்ப மற்றும் பொருளாதார உதவிகளை ஐரோப்பிய ஒன்றியத்தால் வழங்க முடியும். இந்த அந்தஸ்து வழங்கப்பட்டதற்கான நோக்கம் நிறைவேற்றப்படாவிட்டால் வேட்பாளர் அந்தஸ்தை திரும்பப்பெறவும் சட்டம் வகை செய்வது குறிப்பிடத்தக்கது.


Add new comment

Or log in with...