இன்று வரவிருந்த பெற்றோல் கப்பல் தாமதம்; எரிபொருள் விநியோகம் மட்டுப்பாடு

- ஒட்டோ டீசல் விநியோகத்தில் மட்டுப்பாடு கிடையாது

இன்றும் நாளையும் மட்டுப்படுத்தப்பட்ட அளவில் பெற்றோல், சுப்பர் டீசல் விநியோகம் இடம்பெறுமென, மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

இன்று (23) காலை வரவிருந்த 40,000 மெட்ரிக் தொன் ஒக்டேன் 92 பெற்றோல் ஏற்றிய கப்பல் உரிய நேரத்திற்கு வரவில்லை எனவும், ஒரு நாள் தாமதமாக நாளையே வரவுள்ளதால் இத்தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

ஆயினும் மட்டுப்பாடு இன்றி முழு அளவில் ஒட்டோ டீசல் விநியோகம் மேற்கொள்ளப்படுமென  அமைச்சர் கஞ்சன விஜேசேகர தனது ட்விட்டர் கணக்கில் தெரிவித்துள்ளார்.

இவ்வாரம் 3 நாட்களுக்கு எரிபொருளுக்காக அவசியமின்றி வரிசையில் நிற்க வேண்டாமென, அமைச்சர் கஞ்சன கடந்த ஞாயிற்றுக்கிழமை (19) அறிவித்திருந்தார்.

பெற்றோல், டீசலை பெற்றுக் கொள்வதற்காக 90 மில்லியன் டொலர் கடன்கடிதம் திறக்கப்பட்டுள்ளதாகவும், அதற்கமைய, இன்று வியாழக்கிழமை (23) பெற்றோலும், நாளை வெள்ளிக்கிழமை (24) டீசலும் கொண்ட கப்பல்கள் இலங்கையை வந்தடையவுள்ளதாக அமைச்சர் கஞ்சன தெரிவித்திருந்தார்  என்பது குறிப்பிடத்தக்கது.


Add new comment

Or log in with...