சவாலுக்குள்ளான தம்மிக பெரேராவின் எம்.பி. பதவி; தீர்ப்பு வரும் வரை பதவிப்பிரமாணம் இல்லை

- உயர் நீதிமன்றில் உறுதியளிப்பு

தனக்கு எதிரான அடிப்படை உரிமை மனு தொடர்பான தீர்ப்பை வழங்கும் வரை, தாம் எம்.பியாகவோ, அமைச்சராகவோ பதவிப்பிரமாணம் செய்யப் போவதில்லை என வர்த்தகர் தம்மிக பெரேரா உயர் நீதிமன்றத்தில் உறுதியளித்துள்ளார்.

அண்மையில் ஶ்ரீ.ல.பொ.பெ. கட்சியின் தேசியப் பட்டியல் பாராளுமன்ற உறுப்புரிமையிலிருந்து பசில் ராஜபக்‌ஷ தனது பதவியை இராஜினாமா செய்திருந்தார்.

இதனைத் தொடர்ந்து, தாம் பதவி வகித்து வந்த அனைத்து நிறுவனங்களின் பணிப்பாளர் சபைகளியிலிருந்தும் இராஜினாமா செய்த பிரபல தொழிலதிபர் தம்மிக பெரேரோ, பொதுஜன பெரமுன கட்சியின் அங்கத்துவத்தையும் பெற்றிருந்தார்.

அத்துடன், அவரது பெயரை, தேசிய பட்டியல் பாராளுமன்ற உறுப்பினராக அக்கட்சியினால், தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு அறிவித்ததைத் தொடர்ந்து, அது தொடர்பில் தேர்தல்கள் ஆணைக்குழுவினாலும் அதி விசேட வர்த்தமானி அறிவித்தலும் வெளியிடப்பட்டிருந்தது.

இந்நிலையில், கடந்த பொதுத் தேர்தலில் போட்டியிடாத நிலையில், தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு வழங்கும் தேசியப் பட்டியல் பெயர்ப் பட்டியலிலும் பெயர் குறிப்பிடப்படாத அவர், எவ்வகையில் தேசியப் பட்டியல் எம்.பியாக பெயரிடப்பட முடியுமென, குறித்த விடயத்தை சவாலுக்குட்படுத்தி உயர் நீதிமன்றில் அடிப்படை உரிமை மீறல் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


Add new comment

Or log in with...