அத்துருகிரிய எரிபொருள் நிலைய அமைதியின்மை; 9 சந்தேகநபர்கள் கைது

- 6 பொலிஸார் வைத்தியசாலையில்
- பொலிஸாரே முதலில் தாக்கியதாக பிரதேசவாசிகள் தெரிவிப்பு

அத்துருகிரியவில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு அருகில் இடம்பெற்ற அமைதியின்மையை அடுத்து பெண் ஒருவர் உள்ளிட்ட 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நேற்றிரவு (17) குறித்த எரிபொருள் நிரப்பு நிலையத்தில் எரிபொருள் நிறைவடைந்த நிலையில், தொடர்ச்சியாக முழு நாளும் வரிசையில் காத்திருந்த மக்கள் எரிபொருள் கேட்டு போராட்டத்தில் ஈடுபட்ட நிலையில், அவர்களை அங்கிருந்து அகற்ற பொலிஸார் முயற்சித்த நிலையில் அமைதியின்மை ஏற்பட்டுள்ளது.

இச்சம்பவத்தில் காயமடைந்த 6 பொலிஸ் உத்தியோகத்தர்கள் ஹோமாகம வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இதேவேளை, குறித்த இடத்திற்று இரவு 11.50 மணியளவில் வந்த பொலிஸார், யார் இங்கு கூச்சலிடுவது என தெரிவித்து, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தோர் மீது தாக்க ஆரம்பித்ததாக சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் தெரிவிக்கின்றனர்.

இது தொடர்பில் சமூக ஊடகங்களில் வெளியாகியுள்ள வீடியோ காட்சியிலும் இவ்விடயம் தெளிவாக தெரிவதோடு, பொலிஸ் வாகனமொன்று வீதியோரத்திலிருந்த பாதுகாப்பு வேலியை மோதி மக்கள் மீது மோதுவதையும் அதில் காணக்கூடியதாக உள்ளது.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் இன்று (18) கடுவெல நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.


Add new comment

Or log in with...