அரச ஊழியர்களை பணிக்கு அழைப்பதில் மட்டுப்பாடு

- 2 வாரங்களுக்கு நடைமுறை; சுற்றறிக்கை வெளியீடு

அரசாங்க நிறுவனங்களில் ஊழியர்களை கடமைக்கு அழைப்பதை மட்டுப்படுத்தி, பொது நிர்வாகம் மற்றும் உள்நாட்டலுவல்கள் அமைச்சினால் சுற்றுநிருபம் வெளியிடப்பட்டுள்ளது.

எரிபொருள் விநியோக நெருக்கடி காரணமாக பொதுப் போக்குவரத்தில் ஏற்பட்டுள்ள ஸ்தம்பித நிலையை கருத்திற் கொண்டு ஏற்கனவே வெள்ளிக்கிழமை தினங்களில் அரசாங்க நிறுவனங்களை திறக்காதிருக்க, 15/2022 எனும் சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ள நிலையில், அரசாங்க ஊழியர்களை சேவைக்கு அழைப்பதை மட்டுப்படுத்தி 16/2022 எனும் சுற்றறிக்கை தற்போது வெளியிடப்பட்டுள்ளது.

குறித்த சுற்றறிக்கைக்கு அமைய,

  • எதிர்வரும் திங்கட்கிழமை (20) முதல் 2 வாரங்களுக்கு அமுலாகும் வகையில், அரசாங்க சேவைகளை தடையின்றி மேற்கொள்ள அத்தியாவசியமான ஊழியர்களை மாத்திரம் சேவைக்கு அழைக்குமாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
  • சேவைக்கு அழைக்காத ஊழியர்கள் Online முறை மூலம் (வீட்டிலிருந்து) பணியாற்றுவதற்கு தயாராக இருக்க வேண்டுமென குறிப்பிடப்பட்டுள்ளது.
  • குறித்த தினத்தில் பணிக்கு அழைக்கப்படும் ஊழியர்கள் சேவைக்கு சமூகமளிக்காத நிலையில் அவர்களது தனிப்பட்ட விடுமுறையில் குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
  • குறித்த பிரதேசத்திலுள்ள அரச அலுவலகங்களுக்கு ஊழியர்களை கடமைக்கு அழைக்கும்போது, இ.போ.ச. வுடன் கலந்துரையாடி அவசியமான பஸ்களை பெற குறித்த பிரதேச பிரதானிகளுடன் கலந்துரையாடி நடவடிக்கை எடுக்குமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • சேவைக்கு சமுகமளிக்கும்போது, பொதுப் போக்குவரத்தை  பயன்படுத்த ஆலோசனை வழங்குமாறும், அலுவலகத்திற்கு அருகில் உள்ள ஊழியர்களுக்கு, நிறுவனத்தின் வாகனங்கள் மூலம், செலவைக் முகாமைத்துவம் செய்யும் வகையில் போக்குவரத்து வழங்க நடவடிக்கை எடுக்குமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • நீதித் துறையில் உள்ளவர்களை சேவைக்கு அழைப்பது தொடர்பில், நீதிச் சேவை ஆணைக்குழுவினால் ஆலோசனை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
  • அரச தொழில்முயற்சி நிறுவனங்களுக்கு இச்சுற்றறிக்கை ஒழுங்குகளை பின்பற்றுவது தொடர்பில், நிதியமைச்சின் செயலாளரை அணுகி அது தொடர்பான ஆலோசனைகளை பின்பற்றுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • அத்துடன், இதன் காரணமாக அரசாங்க அத்தியாவசிய சேவைகளை மேற்கொள்வதில் இடையூறு ஏற்படக் கூடாது என குறித்த சுற்றுநிருபத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
PDF File: 

Add new comment

Or log in with...