- g6application.moe.gov.lk/
- விபரம் நாளைய தினகரன் பத்திரிகையிலும் வெளிவருகிறது
2021 தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையின் பெறுபேறுகளின் அடிப்படையில் ஏற்கனவே வழங்கப்பட்ட பாடசாலைகளை மாற்றம் செய்வதற்கான மேன்முறையீடு விண்ணப்பங்களை ஒன்லைனில் கோரப்பட்டுள்ளன.
2021 ஆம் ஆண்டிற்கான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையின் பெறுபேறுகளின் அடிப்படையில் 2022 இல் தரம் 6 இல் பாடசாலைகளுக்கு சேர்ப்பது தொடர்பில் வழங்கப்பட்டுள்ள பாடசாலையை மாற்றுவதற்கான மேன்முறையீடுகளை மேற்கொள்ள கல்வி அமைச்சு விண்ணப்பங்களை கோரியுள்ளது.
அதற்கமைய g6application.moe.gov.lk எனும் இணையத்தளத்தின் ஊடாக விண்ணப்பங்களை சமர்ப்பிக்க முடியுமென அமைச்சு விடுத்துள்ள அறிவித்தலில் தெரிவித்துள்ளது.
அதில், கோரப்பட்டுள்ள பாடசாலை விண்ணப்பத்துடன் தொடர்புடைய பாடசாலைக் கணக்கெடுப்பு இலக்கத்தை (Census No), www.moe.gov.lk எனும் கல்வி அமைச்சின் இணையத்தளத்திற்குச் சென்று பெற்றுக்கொள்ளலாம் (தரவிறக்கவும்) என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
விண்ணப்பங்கள் ஜூன் 15 முதல் ஜூன் 30 வரையில் ஒன்லைன் மூலம் மேற்கொள்ள முடியுமென அறிவிக்கப்பட்டுள்ளது.
உரிய மேன்முறையீட்டு விண்ணப்பங்களைப் பூர்த்தி செய்வதற்கான ஆலோசனைகள் பின்வருமாறு (தரவிறக்கவும்)....
Add new comment