Thursday, June 16, 2022 - 11:54am
எரிபொருள் வரிசையில் நிற்கும் முச்சக்கர வண்டி சாரதிகள் (வைப்பக படம்)
பாணந்துறை, வேகட பிரதேசத்தில் எரிபொருளுக்காக வரிசையில் காத்திருந்த ஒருவர் திடீரென சுகவீனமடைந்து உயிரிழந்துள்ளார்.
ஹிரண பிரதேசத்தைச் சேர்ந்த 53 வயதுடைய ஒருவரே இவ்வாறு மரணமடைந்துள்ளார்.
குறித்த நபர், தனது முச்சக்கர வண்டிக்கு எரிபொருள் நிரப்ப வரிசையில் காத்திருந்தபோது, திடீரென சுகவீனமடைந்து பாணந்துறை வைத்தியசாலைக்கு அனுமதிக்கப்பட்ட நிலையில் மரணமடைந்துள்ளார்.
இதேவேளை, பூகொட பிரதேசத்தில் தள்ளுவண்டியில் (wheelbarrow) எரிவாயு சிலிண்டரை தள்ளிக் கொண்டு சென்றிருந்த நபர் ஒருவர் திடீரென சுகவீனமடைந்து உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்தவர் 64 வயதுடையவர் என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
Add new comment