எரிபொருளுக்கான தட்டுப்பாடு எதிர்வரும் நாட்களில் மோசமாக அதிகரிக்கும்

- CPC உள்ளக தகவல்கள் தெரிவிப்பு

எதிர்வரும் நாட்களில் டீசல் மற்றும் பெற்றோல் தட்டுப்பாடு அதிகரிக்கும். இதனால் நாட்டில் எரிபொருள் வரிசைகள் மேலும் நீடிக்கும் என பெற்றோலிய கூட்டுத்தாபன உள்ளக தகவல்கள் தெரிவிக்கின்றன.

சபுகஸ்கந்த சுத்திகரிப்பு நிலையத்தில் சுமார் 350 மெட்ரிக் தொன் பெற்றோல் மற்றும் 800 மெட்ரிக் தொன் டீசல் உற்பத்தி செய்யப்படுகிறது. எனினும், அந்த அளவுகள் அன்றாட தேவைகளுக்கு போதுமானதாக இல்லை எனவும் தெரிவிக்கப்படுகிறது. இதேவேளை, நேற்றைய தினமும் எரிபொருளை பெற்றுக்கொள்வதற்காக மக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்ததை அவதானிக்க முடிந்தது.

குறிப்பாக கொழும்பின் பல பகுதிகளிலும் நீண்ட வரிசையில் காத்திருந்த மக்கள் ஆங்காங்கே வீதிகளை மறித்து ஆர்ப்பாட்டங்களையும் முன்னெடுத்தனர்.


Add new comment

Or log in with...