3rd T20; SLvAUS: இலங்கை அணி அபார வெற்றி; தொடர் 2-1 என அவுஸ்திரேலியாவுக்கு

- 5 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடர் செவ்வாய் ஆரம்பம்

சுற்றுலா அவுஸ்திரேலியா அணிக்கும் இலங்கை அணிக்கும் இடையிலான மூன்றாவது இறுதியமான ரி20 போட்டியில் இலங்கை அணி 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.

நேற்று (11) இரவு கண்டி, பல்லேகலையில் இடம்பெற்ற இப்போட்டியின் நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற அவுஸ்திரேலியா அணி முதலில் துடுப்பாட்டத்தை தெரிவு செய்தது.

அதன்படி, முதலில் துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலியா அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 5 விக்கெட்டுகளை இழந்து 176 ஓட்டங்களை பெற்றுக் கொண்டது.

அவுஸ்திரேலியா அணி சார்பில் டேவிட் வோர்னர் 39 ஓட்டங்களையும், மார்கஸ் ஸ்டேனிஸ் 38 ஓட்டங்களையும் பெற்றுக் கொண்டனர்.

இலங்கை அணி சார்பில் மஹீஷ் தீக்‌ஷண 2 விக்கெட்டுகளையும், வணிந்து ஹசரங்க, பிரவீன் ஜயவிக்ரம தலா ஒவ்வொரு விக்கெட்டையும் வீழ்த்தினர்.

அதற்கமைய, 177 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 19.5 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து வெற்றி இலக்கை அடைந்தது.

 

 

ஒரு கட்டத்தில் 15 ஓவர்கள் நிறைவில் 5 விக்கெட்டுகளை இழந்து 105 ஓட்டங்களை பெற்றிருந்த இலங்கை அணி, கடைசி 5 ஓவர்களில் 75 ஓட்டங்களை பெற்றிருந்தமை விசேட அம்சமாகும்.

இலங்கை அணி சார்பில் அணித்தலைவர் தசுன் ஷானக ஆட்டமிழக்காமல் 25 பந்துகளில் நான்கு 6 ஓட்டங்கள், ஐந்து 4 ஓட்டங்கள் உள்ளிட்ட 54 ஓட்டங்களை பெற்றுக் கொடுத்தார்.

அது தவிர பெத்தும் நிஸ்ஸங்க 27, சரித் அசலங்க 26 ஓட்டங்களை பெற்றுக் கொடுத்தனர்.

பந்துவீச்சில் அவுஸ்திரேலியா அணி சார்பில் ஜோஸ் ஹசில்வூட் மற்றும் மாரகஸ் ஸ்டேனிஸ் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

அந்த வகையில் இப்போட்டியில் இலங்கை அணி வெற்றி பெற்று தொடரை முழுமையாக இழப்பதிலிருந்து தப்பியிருந்த போதிலும், இரு அணிகளுக்கிடையிலான 3 போட்டிகள் கொண்ட ரி20 தொடரை அவுஸ்திரேலியா 2-1 என கைப்பற்றியுள்ளது.

இரு அணிகளுக்கும் இடையிலான, 5 போட்டிகளைக் கொண்ட ஒரு நாள் தொடர், ஜூன் 14 - 24 வரை இடம்பெறவுள்ளது.

முதல் 2 போட்டிகளும் கண்டி, பல்லேகலவில் இடம்பெறவுள்ளதோடு, ஏனைய 2 ஒரு நாள் போட்டிகளும் கொழும்பு, ஆர். பிரேமதாஸ மைதானத்தில் இடம்பெறவுள்ளது.

அதன் பின்னர் 2 போட்டிகளைக் கொண்ட டெஸ்ட் தொடர், ஜூன் 29 - ஜூலை 08 வரை இடம்பெறவுள்ளது.

AUSTRALIA INNINGS (20 overs maximum)
BATTING   R B M 4s 6s SR
David Warner  lbw b Theekshana 39 33 49 6 0 118.18
Aaron Finch (c) b Theekshana 29 20 29 5 0 145.00
Glenn Maxwell  c Gunathilaka b de Silva 16 9 20 0 2 177.77
Steven Smith  not out 37 27 49 2 2 137.03
Josh Inglis  run out (Asalanka) 0 1 2 0 0 0.00
Marcus Stoinis  st †Mendis b Jayawickrama 38 23 29 3 1 165.21
Matthew Wade † not out 13 8 16 2 0 162.50
Extras (nb 1, w 3) 4  
TOTAL 20 Ov (RR: 8.80) 176/5
 
Fall of wickets: 1-43 (Aaron Finch, 5.4 ov), 2-85 (Glenn Maxwell, 9.6 ov), 3-85 (David Warner, 10.1 ov), 4-85 (Josh Inglis, 10.2 ov), 5-133 (Marcus Stoinis, 15.6 ov)
BOWLING O M R W ECON 0s 4s 6s WD NB
Chamika Karunaratne 3 0 19 0 6.33 9 3 0 1 0
Dushmantha Chameera 4 0 46 0 11.50 7 6 1 2 1
Maheesh Theekshana 4 0 25 2 6.25 11 2 1 0 0
Dasun Shanaka 1 0 10 0 10.00 2 2 0 0 0
Wanindu Hasaranga de Silva 4 0 33 1 8.25 8 1 2 0 0
Praveen Jayawickrama 4 0 43 1 10.75 4 4 1 0 0
 
SRI LANKA INNINGS (Target: 177 runs from 20 overs)
BATTING   R B M 4s 6s SR
Danushka Gunathilaka  c JA Richardson b Hazlewood 15 12 17 1 1 125.00
Pathum Nissanka  c Hazlewood b Stoinis 27 25 51 2 0 108.00
Charith Asalanka  c Finch b Stoinis 26 19 25 3 1 136.84
Bhanuka Rajapaksa  lbw b Agar 17 13 23 1 1 130.76
Kusal Mendis † b Hazlewood 6 8 18 1 0 75.00
Dasun Shanaka (c) not out 54 25 38 5 4 216.00
Wanindu Hasaranga de Silva  c Finch b JA Richardson 8 7 9 1 0 114.28
Chamika Karunaratne  not out 14 10 23 2 0 140.00
Extras (b 1, lb 4, w 5) 10  
TOTAL 19.5 Ov (RR: 8.92) 177/6
 
Fall of wickets: 1-25 (Danushka Gunathilaka, 3.2 ov), 2-67 (Charith Asalanka, 8.2 ov), 3-81 (Pathum Nissanka, 10.5 ov), 4-96 (Bhanuka Rajapaksa, 12.2 ov), 5-98 (Kusal Mendis, 13.5 ov), 6-108 (Wanindu Hasaranga de Silva, 15.4 ov)
BOWLING O M R W ECON 0s 4s 6s WD NB
Jhye Richardson 4 0 46 1 11.50 6 7 1 1 0
Josh Hazlewood 4 1 25 2 6.25 15 2 2 0 0
Kane Richardson 2.5 0 44 0 15.52 3 3 3 4 0
Ashton Agar 4 0 23 1 5.75 9 2 0 0 0
Glenn Maxwell 3 0 26 0 8.66 4 2 1 0 0
Marcus Stoinis 2 0 8 2 4.00 4 0 0 0 0

 


Add new comment

Or log in with...