மிலான் எம்.பிக்கு பிணை; சனத் நிஷாந்த, சமன் லால், டான் பிரியசாத்துக்கு வி.மறியல் நீடிப்பு

கடந்த மே மாதம் 09ஆம் திகதி காலி முகத்திடல் மற்றும் கொள்ளுப்பிட்டி பிரதேசங்களில் இடம்பெற்ற வன்முறைகள் தொடர்பில் கைது செய்யப்பட்டு, விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள பாராளுமன்ற உறுப்பினர் மிலான் ஜயதிலக உள்ளிட்ட 13 சந்தேகநபர்கள் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

இதேவேளை, குறித்த சம்பவங்கள் தொடர்பில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள பாராளுமன்ற உறுப்பினர் சனத் நிஷாந்த, மொரட்டுவை மாநகர சபை மேயர் சமன் லால் பெனாண்டோ, டான் பிரியசாத் உள்ளிட் நான்கு சந்தேகநபர்களுக்கு எதிர்வரும் ஜூன் 15ஆம் திகதி வரை விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது.

கடந்த மே மாதம் 09ஆம் திகதி காலி முகத்திடல் மற்றும் கொள்ளுப்பிட்டி பிரதேசங்களில் இடம்பெற்ற தாக்குல் சம்பவங்கள், வன்முறைகள் தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர்களான, மிலான் ஜயதிலக மற்றும் சனத் நிஷாந்த ஆகியோர் கடந்த மே 17ஆம் திகதி கைது செய்யப்பட்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

குறித்த வழக்குத் தொடர்பில் முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெனாண்டோவை கைது செய்யுமாறு கோட்டை நீதவான் திலிண கமகேவினால் இன்றையதினம் (08) பிடியாணை உத்தரவு வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


Add new comment

Or log in with...