மின்சாரம், வைத்திய சேவைகள் அத்தியாவசிய சேவைகளாக பிரகடனம்

- மின்சார சபை பொறியியலாளர்கள் பணிப்புறக்கணிப்பை அறிவித்துள்ள நிலையில் ஜனாதிபதி அதிரடி நடவடிக்கை

மின்சார விநியோகம் மற்றும் வைத்தியசாலை சேவைகள் உள்ளிட்ட  அதனுடன் தொடர்புடைய சில சேவைகள், அத்தியாவசிய சேவைகளாக அறிவித்து ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் அதி விசேட வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது.

2283/33 எனும் ஜூன் 08ஆம் திகதியிடப்பட்ட குறித்த அதி விசேட வர்த்தமானி அறிவித்தலுக்கமைய,

மின்சாரம் வழங்கல் மற்றும் வைத்தியசாலைகள், நேர்சிங் ஹோம்கள் மருந்தகங்கள் மற்றும் அது போன்ற ஏனைய நிறுவனங்களில் நோயாளர்களின் பராமரிப்பு மற்றும் வரவேற்பு, உபசரிப்பு பாதுகாப்பு, போசாக்கூட்டல், சிகிச்சை அளித்தல் ஆகியன தொடர்பில் மேற்கொள்ளப்பட வேண்டிய அல்லது தேவைப்படும் எந்தவொரு சேவைகள், தேவைகள், பணிகள், தொழில்கள் ஆகியன அத்தியாவசிய சேவைகளாக குறிப்பிடப்பட்டுள்ளன.

ஒரு சில விடயங்களை முன்வைத்து, இலங்கை மின்சார சபை பொறியாளர்கள் இன்று நள்ளிரவு (09) முதல் பணிப்புறக்கணிப்பில் ஈடுபடவுள்ளதாக அறிவித்துள்ள நிலையில், ஜனாதிபதியினால் குறித்த அதி விசேட வர்த்தமானி அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

PDF File: 

Add new comment

Or log in with...