சுமந்திரன் எம்.பிக்கு பாதுகாப்புக் கடமையிலிருந்த இராணுவ சிப்பாய் தற்கொலை

"எனது பாதுகாப்பிற்காக அவர்கள் இருப்பதை நான் அறிந்திருந்திருக்கவில்லை; வருத்தமளிக்கிறது" - சுமந்திரன்

தமிழ்த் தேசிய கூட்டமைப்பு கட்சி பாராளுமன்ற உறுப்பினர், எம்.ஏ. சுமந்திரனின் வீட்டுக்கு அருகில் பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டிருந்த இராணுவ சிப்பாய் ஒருவர் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

வெள்ளவத்தை தயா வீதியில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

மரணமடைந்த 22 வயதான குறித்த சிப்பாய் தனது கடமைக்கு வழங்கப்பட்ட துப்பாக்கி மூலம் இவ்வாறு உயிரை மாய்த்துக் கொண்டுள்ளதாக,  பொலிஸாரின் ஆரம்ப கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

இது தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் தனது ட்விட்டர் கணக்கில் பதிவொன்றை இட்டுள்ளார். அதில்,

 

 

"கடந்த மே 09ஆம் திகதி இடம்பெற்ற சம்பவங்களின் பின்னர், அரசாங்க பாராளுமன்ற உறுப்பினர்களின் வேண்டுகோளுக்கு இணங்க அனைத்து எம்.பிக்களுக்கும் இராணுவப் பாதுகாப்பு வழங்கப்பட்டிருந்தது. எனக்கு குறித்த பாதுகாப்பு வேண்டாமென சம்பந்தப்பட்ட அதிகாரியான லெப்டினன்ட் கேணல் குணதிலகவிற்கு தெரிவித்ததைத் தொடர்ந்து, அந்த பாதுகாவலர் உடனடியாக நீக்கப்பட்டார்."

"அதன்பிறகு, குறித்த பிரிவினர் எனது வீட்டிலிருந்து வெகு தொலைவில் பாதையில் இருந்ததை அவதானித்தேன். இதேபோன்ற காவல் படையினர் பல்வேறு தெரு முனைகளிலும் இருந்ததால், தான் அதை தனது பாதுகாப்புக்காக நிறுத்தப்பட்டவர்கள் என கருதவில்லை. இன்று காலை அந்த வீரர்களில் ஒருவர் தற்கொலை செய்து கொண்டார் என்ற மிகவும் துரதிருஷ்டவசமான செய்தியைக் கேள்வுயுற்றேன்."

தற்கொலையை தடுப்போம்!
நீங்கள் தனிமையில் இருப்பதாக உணருகின்றீர்களா அழையுங்கள்

  • தேசிய மனநல உதவி இலக்கம் 1926
  • இலங்கை சுமித்ரயோ 011 2696666
  • CCC line 1333

Add new comment

Or log in with...