Wednesday, June 1, 2022 - 5:50pm
ஒரே நாடு ஒரே சட்டம் தொடர்பான ஜனாதிபதி செயலணிக்கு வழங்கப்பட்டுள்ள கால எல்லை மேலும் 3 வாரங்கள் நீடிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2021 ஒக்டோர் 26ஆம் திகதி ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் தாபிக்கப்பட்ட குறித்த செயலணியின் கால எல்லை கடந்த மே 27ஆம் திகதி நிறைவடைந்துள்ளது.
இந்நிலையில், அதன் பணிகளை நிறைவு செய்யும் பொருட்டு மேலும் 3 வார கால அவகாசம் வழங்கப்பட்டு, அது தொடர்பான அறிவித்தல் அதி விசேட வர்த்தமானி அறிவிப்பு மூலம் வெளியிடப்பட்டுள்ளது.
PDF File:
Add new comment