Ceylon Exchange Mentoring நிறுவனம் வெளிநாடுகளுக்கு விஸ்தரிப்பு ஏற்பாடுகளுக்காக Ataraxia Capital Partners இடமிருந்து முதலீடுகள்

Ataraxia Capital Partners இன் பணிப்பாளர்களான ஷரத் ஸ்ரீ தரன் மற்றும் அசந்த செபாஸ்டியன் ஆகியோர் Ceylon Exchange Mentoring ஸ்தாபகர்களான ராகுல் நிமேஷ் குணசேகர மற்றும் கவிந்து பிரபாசர ஹேரத் ஆகியோருக்கு உடன்படிக்கையை கையளிப்பதைக் காணலாம்.

மூலதன சந்தைகள், டிஜிட்டல் ஊடகம் மற்றும் கல்வித் தொழில்நுட்பம் (EdTech) ஆகிய பிரிவுகளில் இயங்கும் ஆரம்பநிலை நிறுவனமாக Ceylon Exchange Mentoring (CEM) திகழ்கின்றது. 2020 ஆம் ஆண்டின் பிற்பகுதியில் ராகுல் நிமேஷ் குணசேகர மற்றும் கவிந்து ஹேரத் ஆகியோரால் இந்நிறுவனம் நிறுவப்பட்டதுடன், குறிப்பிடத்தக்களவு வருமான அதிகரிப்பையும் பதிவு செய்திருந்தது.

வெளிநாடுகளுக்கு Ceylon Exchange Mentoring நிறுவனத்தின் செயற்பாடுகளை விஸ்தரிக்கும் குறிக்கோளுடன், Ataraxia Capital Partners இடமிருந்து தந்திரோபாய முதலீட்டைப் பெற்றுக் கொண்டுள்ளது. புதிய முதலீட்டுடன் நிறுவனம் டிஜிட்டல் ஊடகம் மற்றும் CEM Studios இன் கீழ் App வடிவமைப்பு ஆகிய நடவடிக்கைகளை மேற்கொள்ளும் பணிகளை ஆரம்பித்துள்ளது.

CEM Studio இல் ஏற்கனவே காணப்படும் வியாபாரங்களில் ஜேர்மனி, சுவிட்சர்லாந்து மற்றும் அவுஸ்திரேலியா போன்ற நாடுகளைச் சேர்ந்த சர்வதேச வாடிக்கையாளர்களும் அடங்கியுள்ளனர். அதன் விரிவாக்கல் திட்டத்துக்கு மேலும் வலுச் சேர்க்கும் வகையில், Ed-Tech முன்னோடிகளுடன் கைகோர்த்து B2B கொடுக்கல் வாங்கல்களில் ஈடுபடவும் திட்டமிட்டுள்ளது. E-கற்றலின் அனுகூலத்தை பெற எதிர்பார்க்கும் மக்களுக்கு அந்தச் சேவைகளை சென்றடையச் செய்வதற்கு உதவியாக அமைந்திருக்கும். முன்னெடுக்கப்படும் கற்கைகளின் உள்ளம்சத்தின் அடிப்படையில் CEM இன் வியாபார மாதிரி அமைந்துள்ளது. மும்மொழிகளிலும் 30க்கும் அதிகமான கற்கைகள் முன்னெடுக்கப்படுவதுடன், பங்குச் சந்தை முதலீடு, நிலையான வருமான பங்குகளில் முதலீடுகள், ரியல் எஸ்டேட் மற்றும் கிரிப்ட்டோகரன்சி முதலீடு போன்றன அடங்கியுள்ளன.

கடந்த 12 மாதங்களில் CEM இனால் 1500 க்கும் அதிகமான மாணவர்களுக்கு தமது முதலீட்டு பயணத்தை ஆரம்பிக்க உதவிகள் வழங்கப்பட்டிருந்தன. CEM இன் செய்தி முகவர் அமைப்பில், சமூக வலைத்தளங்கள், பிரிசுரிப்போர் மற்றும் நிதிச் சந்தைகள் தொடர்பான பிந்திய செய்திகளை சிங்களம் மற்றும் ஆங்கில மொழிகளில் பெற்றுக் கொள்வதற்கென 30,000 க்கும் அதிகமானவர்கள் இணைந்துள்ளனர்.

CEM ஸ்தாபகர் ராகுல் குணசேகர கருத்துத் தெரிவிக்கையில், “எமது நிறுவனம் ஸ்தாபிக்கப்பட்டது முதல், மக்கள் மத்தியில் கல்வியறிவூட்டுவதனூடாக அதிகளவு பெறுமதியை சேர்த்த வண்ணமுள்ளோம். அதனூடாக, சேவைகளைப் பெற்றுக் கொடுக்காத மக்கள் தவிர்க்கப்படுவதை இடைநிறுத்தியுள்ளோம். எனவே, நிறுவனத்துக்கு அதன் தொழில்நுட்பம், சந்தைப் பிரசன்னம் மற்றும் மனித வளங்கள் ஆகியவற்றை வலிமைப்படுத்தும் புதிய வழிமுறைகளை நாம் எதிர்பார்க்கின்றோம்” என்றார்.


Add new comment

Or log in with...