SLPP எம்.பிக்கள் சனத் நிஷாந்த, மிலான் ஜயதிலகவுக்கு ஜூன் 01 வரை வி.மறியல் நீடிப்பு

பொதுஜன பெரமுன கட்சி பாராளுமன்ற உறுப்பினர்களான சனத் நிஷாந்த மற்றும் மிலான் ஜயதிலக உள்ளிட்ட 06 சந்தேகநபர்களுக்கும் ஜூன் 01 வரை விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது.

குறித்த இருவரும் கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றில் கடந்த மே 18ஆம் திகதி முன்னிலைப்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து அவர்களுக்கு இன்று (25) வரை விளக்கமறியல் விதிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் குறித்த வழக்கு இன்றையதினம் (25) கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றில் எடுத்துக் கொள்ளப்பட்டபோது குறித்த இரு எம்.பிக்கள் உள்ளிட்ட 6 சந்தேகநபர்களுக்கும் ஜூன் 01ஆம் திகதி வரை விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது.

மே 09 இல் கொள்ளுப்பிட்டி மற்றும் காலி முகத்திடல் போராட்டக்காரர்கள் மீது மேற்கொண்ட தாக்குதல் சம்பவங்கள் தொடர்பில், SLPP எம்.பி.க்களான சனத் நிஷாந்த மற்றும் மிலான் ஜயதிலக ஆகியோர் கடந்த மே 17ஆம் திகதி குற்றப் புலனாய்வு திணைக்களத்தினால் (CID) கைது செய்யப்பட்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.


Add new comment

Or log in with...