- புதிய அமைச்சரவையில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க உள்ளிட்ட 20 அமைச்சர்கள்
சர்வகட்சி அரசாங்கத்தின் புதிய அமைச்சரவை அமைச்சர்கள் 08 பேர் இன்று (23) முற்பகல் கொழும்பு கோட்டை ஜனாதிபதி மாளிகையில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்துகொண்டனர்.
ஏற்கனவே அமைச்சுப் பதவிகளை பெற்றுள்ள அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல மற்றும் ரமேஷ் பத்திரண ஆகியோருக்கு ஏற்கனவே அமைச்சுப் பதவிகள் வழங்கப்பட்ட நிலையில், மீண்டும் அமைச்சுப் பதவிகள் வழங்கப்பட்டுள்ளன.
அந்த வகையில், ஏற்கனவே 13 அமைச்சர்கள் பதவியேற்றுள்ள நிலையில், தற்போது பதவியேற்றுள்ள 6 அமைச்சர்களுடன், புதிய அமைச்சரவையில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க உள்ளிட்ட 20 அமைச்சர்கள் தற்போது அங்கம் வகிக்கின்றனர்.
1. டக்ளஸ் தேவானந்தா - மீன்பிடி அமைச்சர்
2. பந்துல குணவர்தன - போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர், வெகுசன ஊடக அமைச்சர்
3. கெஹெலிய ரம்புக்வெல்ல - நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு அமைச்சர்
4. மஹிந்த அமரவீர - விவசாயம், வனஜீவராசிகள் மற்றும் வனவள பாதுகாப்பு அமைச்சர்
5. ரமேஷ் பத்திரண - கைத்தொழில் அமைச்சர்
6. விதுர விக்ரமநாயக்க - புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர்
7. அஹமட் நசீர் - சுற்றாடல் அமைச்சர்
8. ரொஷான் ரணசிங்க - நீர்ப்பாசனம், விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார அமைச்சர்
Add new comment