20 வயதுக்கு மேற்பட்ட சகலருக்கும் 4ஆவது டோஸ்

- நேற்றிலிருந்து ஆரம்பம்

20 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் கொவிட்-19 வைரஸ் தடுப்பூசியின் நான்காவது தடுப்பூசியை தடுப்பூசி மையங்களிலிருந்து நேற்று பெற்றுக்கொள்ளுமாறு கொழும்பு பிராந்திய தொற்றுநோய் நிபுணர் டாக்டர் டினு குருகே கேட்டுக் கொண்டுள்ளார்.

 

 

தடுப்பூசிக்கு தகுதியுடையவர்கள் குறைந்தபட்சம் 20 வயதுடையவர்களாக இருக்க வேண்டும் மற்றும் குறைந்தபட்சம் மூன்று மாதங்களுக்கு முன்பு அவர்களின் முந்தைய கொவிட்19 தடுப்பூசியை பெற்றிருக்க வேண்டும். எவ்வாறாயினும், நான்காவது தடுப்பூசியை 20 முதல் 60 வயதுடைய பெரியவர்களுக்கும், அதே போல் நோயெதிர்ப்பு குறைபாடு உள்ளவர்களுக்கும் பரிந்துரைக்கப்படுவதாக சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

 


Add new comment

Or log in with...