வன்முறை, சட்ட விரோத செயல்கள் தொடர்பில் அறிவிக்குமாறு தொலைபேசி இலக்கங்கள்

0767393977, 0112441146
- பாதுகாப்பு அமைச்சு பொது மக்களிடம் வேண்டுகோள்

நாட்டின் எந்நதப்பாகத்திலாவது வன்முறைச் சம்பவங்கள் மற்றும் சட்டவிரோத செயற்பாடுகள் இடம்பெறும் பட்சத்தில் அது தொடர்பில் உடனடியாக அறிவிக்கும் பொருட்டு பாதுகாப்பு அமைச்சு மற்றும் பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சு விஷேட தொலைப்பேசி இலக்கங்களை அறிமுகம் செய்துள்ளது.

இதற்கமைய பாதுகாப்பு அமைச்சின் 0767393977, 0112441146 என்ற தொலைப் பேசி இலக்கங்களுக்கோ அல்லது பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சின் 118 என்ற இலக்கத்திற்கோ உடனடியாக தொடர்பு கொண்டு அறியத்தருமாறு பாதுகாப்பு அமைச்சு நாட்டிலுள்ள சகல பொது மக்களிடமும் விஷேட கோரிக்கையை விடுத்துள்ளது.

பாதுகாப்பு அமைச்சு விடுத்துள்ள விஷேட ஊடக அறிக்கையில் மேலும் குறிப்பிடுகையில் :-

நாட்டின் எந்தப் பிரதேசத்திலாவது சட்டத்தை மீறும் வகையில் குற்றச் செயல்கள், சட்ட விரோத கும்பல்கள், வன்முறைக் குழுக்களின் செயற்பாடு, பொது, தனியார் சொத்துகளுக்கு சேதம் விளைவித்தல், தாக்குதல் மற்றும் கொள்ளைச் சம்பவங்கள் இடம்பெறும் பட்சத்தில் அது தொடர்பில் மேலே குறிப்பிடப்பட்டுள்ள இலக்கங்களுக்கு அறியத்தருமாறு பாதுகாப்பு அமைச்சு பொது மக்களிடம் வேண்டுகோள் விடுக்கின்றது.

இதேவேளை, சட்டவிரோத கும்பல் அல்லது வன்முறைக் குழுக்களினால் மேற்கொள்ளப்படும் வாகனச் சோதனைகள் மற்றும் பொது, தனியார் சொத்துக்களுக்கு சேதம் விளைவித்தல், கொள்ளையடித்தல் மற்றும் தாக்குதல் சம்பவங்களை தடுக்க தேவைப்படும் பட்சத்தில் துப்பாக்கிச் சூடு நடத்துவதற்கு தேவையான பலத்தை பயன்படுத்துமாறு முப்படைகளுக்கு ஏற்கனவே அறிவுறுத்தல்கள் பாதுகாப்பு அமைச்சினால் ஏற்கனவே வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

ஸாதிக் ஷிஹான்


Add new comment

Or log in with...