இலங்கையின் புதிய பிரதமராக ரணில் விக்ரமசிங்க பதவிப்பிரமாணம்

- இலங்கையின் பிரதமராக 6ஆவது முறையாக பதவிக்கு

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க புதிய பிரதமராக பதவிப் பிரமாணம் செய்து கொண்டுள்ளார்.

1949ஆம் ஆண்டு மார்ச் 24ஆம் திகதி பிறந்த பிறந்த ரணில் விக்ரமசிங்கவுக்கு 73 வயதாகும்.

இன்று (12) பிற்பகல் கொழும்பு கோட்டையில் உள்ள ஜனாதிபதி மாளிகையில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ முன்னிலையில் பதவியேற்பு நிகழ்வு இடம்பெற்றது.

ரணில் விக்ரமசிங்க இதற்கு முன்னர் *ஐந்து முறை பிரதமராக பதவி வகித்துள்ளார்.

  • 1993 - 1994 (07 May 1993 - 19 August 1994)
  • 2001 - 2004 (09 December 2001 - 02 April 2004)
  • 2015 - 2015 (09 January 2015 - 21 August 2015)
  • 2015 - 2018 (24 August 2015 - 26 October 2018)
  • 2018 - 2019 (16 December 2018 - 21 November 2019)

அந்த வகையில் அதிக தடவை இலங்கையின் பிரதமராக பதவி வகித்தவராக ரணில் விக்ரமசிங்க விளங்குகின்றார்.

ஜனாதிபதியின் செயலாளர் காமினி செனரத் மற்றும் பிரதமரின் பாரியார் மைத்திரி விக்கிரமசிங்க ஆகியோரும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

*இலங்கையின் பிரதமர்கள்: மூலம் parliament.lk


Add new comment

Or log in with...