நாடு முழுவதும் மே 16 இரவு 11 மணி முதல் ஊரடங்கு (UPDATE)

திங்கள் இரவு 11.00 மணி முதல் செவ்வாய் அதிகாலை 5.00 மணி வரை ஊடங்கு (மே 16, 2022: 5.26pm)

பொதுமக்கள் பாதுகாப்பு கட்டளைச் சட்டத்தின் 16ஆவது பிரிவின் விதிகளுக்கு அமைய நாடு முழுவதும் இன்று (16) திங்கட்கிழமை இரவ 11.00 மணி முதல் நாளை (17) அதிகாலை 5.00 மணி வரை ஊரடங்குச் சட்டம் அமுலில்  இருக்குமென அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, அங்கீகரிக்கப்பட்ட அதிகாரியால் வழங்கப்பட்ட எழுத்துப்பூர்வ அனுமதியின் அதிகாரத்தின் கீழ் தவிர, அந்த பகுதிகளில் உள்ள பொதுச்சாலை, புகையிரதப் பாதை, பொதுப் பூங்கா, பொது விளையாட்டு மைதானம் அல்லது கடற்கரையில் யாரும் தங்குவதற்கு அனுமதி இல்லை.

திங்கள் இரவு 8.00 மணி முதல் செவ்வாய் அதிகாலை 5.00 மணி வரை ஊடங்கு (மே 16, 2022: 1.38pm)

பொதுமக்கள் பாதுகாப்பு கட்டளைச் சட்டத்தின் 16ஆவது பிரிவின் விதிகளுக்கு அமைய நாடு முழுவதும் இன்று (16) திங்கட்கிழமை இரவ 8.00 மணி முதல் நாளை (17) அதிகாலை 5.00 மணி வரை ஊரடங்குச் சட்டம் அமுலில்  இருக்குமென அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, அங்கீகரிக்கப்பட்ட அதிகாரியால் வழங்கப்பட்ட எழுத்துப்பூர்வ அனுமதியின் அதிகாரத்தின் கீழ் தவிர, அந்த பகுதிகளில் உள்ள பொதுச்சாலை, புகையிரதப் பாதை, பொதுப் பூங்கா, பொது விளையாட்டு மைதானம் அல்லது கடற்கரையில் யாரும் தங்குவதற்கு அனுமதி இல்லை.

சனிக்கிழமை மு.ப. 6.00 மணிக்கு நீக்கம்; மீண்டும் பி.ப. 6.00 மணிக்கு அமுல் (மே 13, 2022: 8.20pm)

பொதுமக்கள் பாதுகாப்பு கட்டளைச் சட்டத்தின் 16ஆவது பிரிவின் விதிகளுக்கு அமைய நாடு முழுவதும் அமுல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்குச் சட்டம் நாளை (14) சனிக்கிழமை காலை 6.00 மணிக்கு நீக்கப்படவுள்ளது.

மீண்டும் நாளை சனிக்கிழமை மாலை 6.00 மணிக்கு அமுல்படுத்தப்பட்டு மறுநாள் (14) ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 5.00 மணி வரை அமுலில்  இருக்குமென அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, அங்கீகரிக்கப்பட்ட அதிகாரியால் வழங்கப்பட்ட எழுத்துப்பூர்வ அனுமதியின் அதிகாரத்தின் கீழ் தவிர, அந்த பகுதிகளில் உள்ள பொதுச்சாலை, புகையிரதப் பாதை, பொதுப் பூங்கா, பொது விளையாட்டு மைதானம் அல்லது கடற்கரையில் யாரும் தங்குவதற்கு அனுமதி இல்லை.

வெள்ளிக்கிழமை காலை ஊரடங்கு நீக்கம்; மீண்டும் பி.ப. 2.00 மணிக்கு அமுல் (மே 12, 2022: 7.52pm)

பொதுமக்கள் பாதுகாப்பு கட்டளைச் சட்டத்தின் 16ஆவது பிரிவின் விதிகளுக்கு அமைய நாடு முழுவதும் அமுல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்குச் சட்டம் நாளை (13) வெள்ளிக்கிழமை காலை 6.00 மணிக்கு நீக்கப்படவுள்ளது.

மீண்டும் நாளை வெள்ளிக்கிழமை பி.ப. 2.00 மணிக்கு அமுல்படுத்தப்பட்டு மறுநாள் (14) சனிக்கிழமை காலை 6.00 மணி வரை அமுலில்  இருக்குமென அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, அங்கீகரிக்கப்பட்ட அதிகாரியால் வழங்கப்பட்ட எழுத்துப்பூர்வ அனுமதியின் அதிகாரத்தின் கீழ் தவிர, அந்த பகுதிகளில் உள்ள பொதுச்சாலை, புகையிரதப் பாதை, பொதுப் பூங்கா, பொது விளையாட்டு மைதானம் அல்லது கடற்கரையில் யாரும் தங்குவதற்கு அனுமதி இல்லை.

வியாழன் காலை ஊரடங்கு நீக்கம்; மீண்டும் பி.ப. 2.00 மணிக்கு அமுல் (மே 11, 2022: 8.54pm)

நாடு முழுவதும் அமுல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்குச் சட்டம் நாளை (12) வியாழக்கிழமை காலை 7.00 மணிக்கு நீக்கப்படவுள்ளது.

மீண்டும் நாளை வியாழக்கிழமை பி.ப. 2.00 மணிக்கு அமுல்படுத்தப்பட்டு மறுநாள் (13) வெள்ளிக்கிழமை காலை 6.00 மணி வரை அமுலில்  இருக்குமென அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, அங்கீகரிக்கப்பட்ட அதிகாரியால் வழங்கப்பட்ட எழுத்துப்பூர்வ அனுமதியின் அதிகாரத்தின் கீழ் தவிர, அந்த பகுதிகளில் உள்ள பொதுச்சாலை, புகையிரதப் பாதை, பொதுப் பூங்கா, பொது விளையாட்டு மைதானம் அல்லது கடற்கரையில் யாரும் தங்குவதற்கு அனுமதி இல்லை.

ஊரடங்கு சட்டம் வியாழக்கிழமை வரை நீடிப்பு (மே 10, 2022: 9.14pm)

நாடளாவிய ரீதியில் நேற்று, (09) இரவு 7.00 மணி முதல் நாளை (11) காலை 7.00 மணி வரை அமுல்படுத்தப்பட்டிருந்த ஊரடங்குச் சட்டம், பொது பாதுகாப்பு கட்டளைச் சட்டத்தின் 16ஆவது பிரிவின் விதிகளுக்கு இணங்க வியாழக்கிழமை (12) காலை 7.00 மணி வரை நீடிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, அங்கீகரிக்கப்பட்ட அதிகாரியால் வழங்கப்பட்ட எழுத்துப்பூர்வ அனுமதியின் அதிகாரத்தின் கீழ் தவிர, அந்த பகுதிகளில் உள்ள பொதுச்சாலை, புகையிரதப் பாதை, பொதுப் பூங்கா, பொது விளையாட்டு மைதானம் அல்லது கடற்கரையில் யாரும் தங்குவதற்கு அனுமதி இல்லை.

ஊரடங்கு சட்டம் புதன்கிழமை வரை நீடிப்பு (மே 09, 2022: 11.18pm) 

நாடளாவிய ரீதியில் இன்று, (09) இரவு 7.00 மணி முதல் நாளை (10) காலை 7.00 மணி வரை அமுல்படுத்தப்பட்டிருந்த ஊரடங்குச் சட்டம், பொது பாதுகாப்பு கட்டளைச் சட்டத்தின் 16ஆவது பிரிவின் விதிகளுக்கு இணங்க 2022.05.11 புதன்கிழமை காலை 7.00 மணி வரை நீடிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, அங்கீகரிக்கப்பட்ட அதிகாரியால் வழங்கப்பட்ட எழுத்துப்பூர்வ அனுமதியின் அதிகாரத்தின் கீழ் தவிர, அந்த பகுதிகளில் உள்ள பொதுச்சாலை, புகையிரதப் பாதை, பொதுப் பூங்கா, பொது விளையாட்டு மைதானம் அல்லது கடற்கரையில் யாரும் தங்குவதற்கு அனுமதி இல்லை.

பொதுமக்கள் பாதுகாப்பு கட்டளைச் சட்டத்தின் கீழ் செவ்வாய்க்கிழமை (10) மு.ப. 7.00 மணி வரை ஊரடங்கு (மே 09, 2022: 9.36pm)

பொதுமக்கள் பாதுகாப்பு கட்டளைச் சட்டத்தின் 16ஆவது பிரிவின் விதிகளுக்கு அமைய இன்று, (09) இரவு 7.00 மணி முதல் நாளை (10) காலை 7.00 மணி வரை நாடு முழுவதும் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்படுவதாக, அறிவிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி ஊடகப் பிரிவு விடுத்துள்ள அறிவித்தலிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

அங்கீகரிக்கப்பட்ட அதிகாரியால் வழங்கப்பட்ட எழுத்துப்பூர்வ அனுமதியின் அதிகாரத்தின் கீழ் தவிர, அந்த பகுதிகளில் உள்ள பொதுச்சாலை, புகையிரதப் பாதை, பொதுப் பூங்கா, பொது விளையாட்டு மைதானம் அல்லது கடற்கரையில் யாரும் தங்குவதற்கு அனுமதி இல்லை.

மறு அறிவித்தல் வரை நாடளாவிய ரீதியில் ஊரடங்குச் சட்டம்

- அலரி மாளிகைக்கு அருகில் மாபெரும் போராட்டம் (மே 09, 2022: 2.52pm)

மறு அறிவித்தல் வரை நாடளாவிய ரீதியில் உடன் அமுலுக்கு வரும் வகையில் (09) ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளதாக, பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் அறிவித்துள்ளது.

ஶ்ரீ லங்கா பொதுஜன பெரமுன ஆதரவாளர்களால், நாட்டில் கடந்த 30 நாட்களாக மிக அமைதியாக இடம்பெற்று வந்த ஆர்ப்பாட்டங்கள் மீது தாக்குதல் நடாத்தப்பட்டமையைத் தொடர்ந்து குறித்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

குறித்த தாக்குதல்களில் 23 பேர் காயமடைந்து கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதோடு, பிரதமரின் இல்லமான அலரி மாளிகைக்கை முன்பாக இடம்பெற்று வந்த ஆர்ப்பாட்டத்தின் மீது தாக்குதல் நடாத்திய பொதுஜன பெரமுன ஆதரவாளர்கள், அங்கிருந்து சுமார் 2 கி.மீ. இற்கும் அதிக தூரத்தில் ஜனாதிபதி செயலகத்திற்கு முன்பாக இடம்பெற்று வந்த போராட்டக்களத்திற்கு வந்து அங்கும் சேதம் விளைவித்ததோடு, பலர் மீது தாக்குதல் நடாத்தியிருந்தனர்.

இதனைத் தொடர்ந்து இடம்பெற்று வரும் அமைதியின்மை காரணமாக அதனைக் கட்டுப்படுத்தும் வகையில் இவ்வாறு பொலிஸ் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து, அனைத்து பல்கலைக்கழக மாணவர்கள் ஒன்றிய மாணவர்கள் தற்போது அலரி மாளிகை பிரதேசத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளதோடு, அவர்களுக்கு ஆதரவாக தற்போது நூற்றுக் கணக்கானோர் அங்கு குழுமியுள்ளனர்.

Add new comment

Or log in with...