பிரதமர் பதவியில் இருந்து விலகினார் மஹிந்த

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தனது பதவியில் இருந்து விலகும் இராஜினாமா கடிதத்தை ஜனாதிபதியிடம் கையளித்துள்ளார்.

இதனை பிரதமர் அலுவலகம் உறுதிப்படுத்தியுள்ளது.

இன்றைய தினம் அலரி மாளிகையில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ வை சந்தித்த ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சி ஆதரவாளர்கள், அதன் பின்னர் அங்கிருந்து அலரி மாளிகைக்கு அருகில் இடம்பெற்று வந்த, 'மைனா கோ கம' போராட்டக் களம் மற்றும் அதனைத் தொடர்ந்து ஜனாதிபதி செயலகத்திற்கு முன்பாக இடம்பெற்று வந்த 'கோட்டா கோ கம' போராட்டங்களுக்கு சேதம் விளைவித்ததைத் தொடர்ந்து ஏற்பட்ட அமைதியின்மை அடுத்து இவ்வாறு பிரதமர் பதவி விலகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.


Add new comment

Or log in with...