ஆர்ப்பாட்டங்களின் போது வன்முறை குறித்து கவலை

அமைதி முறைக்கு பிரிட்டன் வலியுறுத்து

இலங்கையில் நடைபெற்று வரும் ஆர்ப்பாட்டங்களின் போது இடம்பெறும் வன்முறைகள் குறித்து பிரிட்டன் கவலை வெளியிட்டுள்ளது.

ஆர்ப்பாட்டங்களின் போது இடம்பெறும் வன்முறைகள் குறித்து கவலையடைவதாக தெரிவித்துள்ள பிரிட்டன் அரசாங்கம், இலங்கையின் அரசியல் பொருளாதார நெருக்கடிகளுக்கு தீர்வைக் காண்பதற்காக அனைத்து தரப்பினரையும் ஜனநாயகத்தை மதிக்கின்ற அனைவரையும் உள்ளடக்கிய அமைதியான வழிமுறைகளை பயன்படுத்துமாறு கேட்டுக்கொண்டுள்ளது.

நாங்கள் எங்கள் மனித உரிமை கரிசனைகள் குறித்து இலங்கையுடன் தொடர்ச்சியாக பேச்சுசுவார்த்தைகளில் ஈடுபட்டுள்ளோம். மனித உரிமைகளில் முன்னேற்றம் காணவேண்டியது குறித்தும் இலங்கை மக்களுக்கு நீதி பொறுப்புக்கூறலை வழங்கவேண்டியது குறித்தும் அஹமட் பிரபு, இலங்கை ஜனாதிபதி வெளிவிவகார அமைச்சரை சந்தித்தவேளை தெரிவித்திருந்தாரென பிரிட்டனின் பாராளுமன்ற பொதுநலவாய அபிவிருத்தி அலுவலகத்தின் இராஜாங்க அமைச்சர் விக்கி போர்ட் பிரிட்டன் பாராளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

தென்னாசியாவுக்கான அமைச்சர் தாரிக் அஹமட் அமைதியாக ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடுவதற்கான உரிமைகள் பாதுகாக்கப்படவேண்டும். வன்முறைகள் நிறுத்தப்பட வேண்டுமென தெரிவித்துள்ளாரெனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

 


Add new comment

Or log in with...