மியன்மார் முன்னாள் தலைவி ஆங் சான் சூகி ஊழல் வழக்கில் குற்றவாளி என நிரூபிக்கப்பட்டதையடுத்து, அந்நாட்டு இராணுவ நீதிமன்றத்தினால் அவருக்கு 5 வருட சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
முந்தைய யங்கூன் முதலமைச்சரின் ஆதரவைக் கோரி அவருக்கு, சூக்கி கையூட்டு தந்ததாகக் குற்றச்சாட்டுகள் கூறுகின்றன. அது தொடர்பில் அவருக்கு 15 ஆண்டு வரை சிறைத்தண்டனை விதிக்கப்படலாம்.
ஆங் சான் சூகிக்கு எதிரான முதல் 11 ஊழல் வழக்குகளில் அந்நாட்டு இராணுவ நீதிமன்றில் குற்றவாளியாகக் அடையாளம் காணப்பட்டதைத் தொடர்ந்து அவருக்கு இவ்வாறு 5 வருட சிறைத்தண்டனை விதித்து இராணுவ ஆட்சியில் இருக்கும் மியான்மர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
ரொய்ட்டர்ஸ் மற்றும் அசோசியேட்டட் பிரஸ் செய்தி நிறுவனங்கள் உரிய ஆதாரங்களை மேற்கோள் காட்டி செய்தி வெளியிட்டுள்ளன. அதற்கமைய இன்றையதினம் (27) மியான்மரின் தலைநகரான நய்பிடாவில் தண்டனை அறிவிக்கப்பட்டுள்ளது.
நேற்றையதினம் குறித்த தீர்ப்பு அறிவிக்கப்படுவதாக இருந்த நிலையில், இன்றையதினம் நீதிமன்றம் கூடிய சில நிமிடங்களில் நீதிபதி குறித்த தீர்ப்பை வழங்கியதாக ரொய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
76 வயதான ஆங் சான் சூகி, முன்னாள் யாங்கூன் முதல்வர் பியோ மின் தெய்னின் ஆதரவாளராக மாறுவதற்காக, அவரிடமிருந்து 11.4 கிலோ (402 அவுன்ஸ்) தங்கம் மற்றும் $600,000 பணத்தை இலஞ்சமாக பெற்றமை தொடரர்பாக அவர் மீது முன்வைக்கப்பட்டிருந்த குற்றச்சாட்டுகள் நிரூபணமானதாக தெரிவிக்கப்படுகின்றது.
Add new comment