அரசாங்கத்திற்கு எதிராக வாக்களிக்க இ.தொ.கா. தீர்மானம்

- 120 எம்.பிக்கள் தயார் என உதய கம்மன்பில தெரிவிப்பு

அரசாங்கத்திற்கு எதிராக எதிர்க்கட்சியால்  கொண்டுவரப்படவுள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணையில் அரசாங்கத்திற்கு எதிராக வாக்களிக்க தீர்மானம் எடுத்துள்ளதாக இலங்கை தொழிலாளர் காங்கிரஸ், அறிவித்துள்ளது.

இது தொடர்பில் ட்விட்டர் பதிவொன்றை விடுத்துள்ள இ.தொ.க. கட்சியின் பொதுச் செயலாளர் ஜீவன் தொண்டமான இதனைத் தெரிவித்துள்ளார்.

விரிவான கலந்துரையாடலின் பின்னர் குறித்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாகவும், ஆளும் கட்சி, எதிர்க்கட்சி மற்றும் சுயாதீனமாக இயங்கும் கட்சி தலைவர்களுக்கு குறித்த முடிவு அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தனது ட்விட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேவளை, ஐக்கிய மக்கள் சக்தி கொண்டுவரவுள்ள அரசாங்கத்திற்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு தாம் உள்ளிட்ட 120 எம்.பிக்களின் ஆதரவு உள்ளதாக, முன்னாள் அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.

அரசாங்கம் பதவி விலகுவதற்கு ஒரு வார கால அவகாசம் வழங்கப்படுவதாகவும், அவ்வாறு மேற்கொள்ளாவிட்டால் குறித்த நடவடிக்கைக்கு தாங்கள் ஒத்துழைப்பு வழங்கவுள்ளதாக உதய கம்மன்பில மேலும் தெரிவித்தார்.

இன்று (25) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இதனைத் தெரிவித்திருந்தார்.


Add new comment

Or log in with...