சுமார் 325 தொழிற்சாலை ஊழியர்கள் வைத்தியசாலையில் அனுமதி

கொக்கல ஆடைத்தொழிற்சாலை ஊழியர்கள் 325 பேர் கராபிட்டி போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

உணவு விசமடைந்தமை காரணமாக அவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக, கராபிட்டி வைத்தியசாலையின் பணிப்பாளர் உறுதிப்படுத்தியுள்ளார்.

கொக்கல சுதந்திர வர்த்த வலயத்திலுள்ள குறித்த தொழிற்சாலையில் காலை ஆகாரமாக வழங்கப்பட்ட உணவை உட்கொண்டவர்களுக்கு ஏற்பட்ட திடீர் சுகவீனம் காரணமாக இவ்வாறு அவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.


Add new comment

Or log in with...