அரச பாடசாலைகளில் 2022 இற்கு தரம் 01 இற்கு மாணவர்களை சேர்த்தல் நாளை மறுதினம், ஏப்ரல் 19ஆம் திகதி இடம்பெறுமென கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.
அத்துடன், புனித ரமழான் நோன்பு காரணமாக விடுமுறை வழங்கப்பட்டுள்ள முஸ்லிம் பாடசாலைகளில் தரம் 01 இற்கு மாணவர்களை சேர்த்துக் கொள்ளும் நிகழ்வு மே 05ஆம் திகதி இடம்பெறுமென அறிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, நாட்டிலுள்ள அனைத்து அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தமிழ், சிங்கள பாடசாலைகள் நாளை ஆரம்பிக்கப்படவுள்ளதோடு, முஸ்லிம் பாடசாலைகள் ரமழான் விடுமுறையின் பின்னர் மே 04ஆம் திகதி ஆரம்பிக்கப்படவுள்ளன.
பாடசாலைகளின் நேரத்தை ஒரு மணி நேரம் அதிகரிப்பதும் இடைநிறுத்தப்பட்டுள்ளது.
2022 இல் தரம் ஒன்றிற்கு மாணவர்களை சேர்த்தல் :
- தமிழ், சிங்கள பாடசாலைகள்: ஏப்ரல் 19
- முஸ்லிம் பாடசாலைகள்: மே 05
Add new comment