லிட்ரோ எரிவாயு நிறுவன தலைவர் இராஜினாமா கையளிப்பு

லிட்ரோ கேஸ் லங்கா (Litro Gas Lanka) எரிவாயு நிறுவனத்தின் தலைவர் தெஷார ஜயசிங்க தனது பதவியில் இருந்து விலகியுள்ளார்.

இது தொடர்பான தனது இராஜினாமா கடிதத்தை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடம் கையளித்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

இலங்கையின் பிரதான எரிவாயு விநியோகஸ்தரான Litro Gas Lanka நிறுவனம் அண்மைக்காலமாக, எரிவாயு சிலிண்டர்களின் பற்றாக்குறை, எரிவாயு சிலிண்டர்கள் வெடிப்பு மற்றும் உற்பத்திப் பிரச்சினைகள் உட்பட பல பிரச்சினைகளுக்கு முகம் கொடுத்து வந்துள்ளது.

லிட்ரோ கேஸ் நிறுவனத்திற்கு, கடந்த 2021 ஜூலை 26 இல் தலைவராக பொறுப்பேற்றபோது அந்நிறுவனம் பல்வேறு ஊழல் மோசடிகள் நிறைந்ததாக காணப்பட்டதாகவும், அதிலிருந்து அந்நிறுவனத்தை மீட்க தான் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டதாக தெஷார ஜயசிங்க தனது இராஜினாமா கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

தெஷார ஜெயசிங்கவை, கடந்த ஜனவரி 13ஆம் திகதி நிதி அமைச்சராக இருந்த பசில் ராஜபக்ஷவினால் பதவி நீக்குவதாக அறிவிக்கப்பட்ட நிலையில், ஜனாதிபதியின் தலையீட்டுடன் அவர் அன்றைய தினமே மீண்டும் குறித்த பதவிக்கு நியமிக்கப்பட்டிருந்தார். குறித்த தினத்தில் லிட்ரோ எரிவாயு முனையம் மற்றும் களஞ்சிய நிலையங்களையும் ஜனாதிபதி பார்வையிட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

தெஷார ஜயசிங்கவினால் ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்டுள்ள இராஜினாமா கடிதம் வருமாறு....


Add new comment

Or log in with...