Monday, April 11, 2022 - 6:00am
இலங்கை பிரதிநிதிகள் குழுவொன்று எதிர்வரும் 18 ஆம் திகதி அமெரிக்காவின் வொசிங்டன் நோக்கி பயணிக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சர்வதேச நாணய நிதியத்துடன் பேச்சுவார்த்தை மேற்கொள்வதற்காக குறித்த குழுவினர் பயணமாகவுள்ளனர்.
இந்த பேச்சுவார்த்தை 5 நாட்களுக்கு நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. நிதி அமைச்சர் அலி சப்ரி, மத்திய வங்கியின் ஆளுனர் கலாநிதி நந்தலால் வீரசிங்க மற்றும் நிதி அமைச்சின் செயலாளர் கே. எம். எம் சிறிவர்தன ஆகியோரே இவ்வாறு பயணமாகவுள்ளனர்.
Add new comment