Saturday, April 9, 2022 - 4:34pm
அனுமதிப்பத்திரம் கொண்ட அனைத்து அரச மற்றும் தனியார் வங்கிகளும் ஏப்ரல் 11 (திங்கட்கிழமை), ஏப்ரல் 12 (செவ்வாய்க்கிழமை) வழமை போன்று வங்கி நடவடிக்கைகளுக்காக திறந்திருக்குமென, இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது.
தமிழ், சிங்கள புது வருடம் எதிர்வரும் வாரம் வரவுள்ள நிலையில், குறித்த வாரத்தில் ஏப்ரல் 11, 12ஆம் திகதிகள் மாத்திரம் விடுமுறை அற்ற தினமாக அமைவதால், அரசாங்க ஊழியர்களுக்கு குறித்த இரு தினங்களையும் அரசாங்க பொது விடுமுறை தினமாக, அரசாங்கம் பிரகடனப்படுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
Add new comment