விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் ஸ்தலத்திலேயே பலி

விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் ஸ்தலத்திலேயே பலி-3 From Same Family Killed in an Accident

தணமல்வில பகுதியில் இன்று (07) முற்பகல் இடம்பெற்ற விபத்தில், ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவர் உயிரிழந்துள்ளனர்.

தணமல்வில - உடவளவை வீதியில் 3ஆம் கட்டை பகுதியில், வீதியில் பயணித்த கெப் வாகனம் முச்சக்கர வண்டி ஒன்றுடன்  மோதியதில் இவ்விபத்து இடம்பெற்றுள்ளதாக, பொலிஸ் ஊடகப் பேச்சாளர், நிஹால் தல்தூவ தெரிவித்தார்.

விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் ஸ்தலத்திலேயே பலி-3 From Same Family Killed in an Accident

இதன்போது, குறித்த முச்சக்கரவண்டியில் பயணித்த தந்தை, தாய், மகள் ஆகிய மூவரும் ஸ்தலத்திலேயே உயிரிழந்துள்ளதாக அவர் தெரிவித்தார்.

இவ்வாறு மரணமடைந்தவர்கள் பதுளை பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் ஸ்தலத்திலேயே பலி-3 From Same Family Killed in an Accident

இதனைத் தொடர்ந்து கெப் வண்டியை செலுத்திய சாரதி கைது செய்யப்பட்டுள்ளார்.

விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை தணமல்வில பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.

Add new comment

Or log in with...